|
||
சிவாலய
தரிசன
விதிமுறை 1,ஆலய
தரிசனம்
செய்வோர்
நீராடி,தூய
உடை அணிந்து
திருநீறு,
உருத்திராக்கம்
போன்றவை
அணிந்து
கொண்ட செல்ல
வேண்டும் 2,வெற்றிலை,பாக்கு,பழம்,தேங்காய்,மலர்கள்
முதலிய
வழிபாட்டுப் பொருட்களைக்
கொண்டு
போகலாம் 3,முதலில்
ஆலய
கோபுரத்தை
வணங்க
வேண்டும் 4,உள்ளே
சென்று,கொடி
மரத்தின்
முன்னே,
ஆண்கள் தலை
மோவாய் இருகைகள்
இரபுயங்கள்,ழுழந்தாளிரண்டு
ஆகிய எட்டும்
நிலத்தில்
படுமாறு-(அஷ்டாங்க
நமஸ்காரம்)
வண்ஙக
வேண்டும் பெண்கள்,தலை
இரகைகள்,இரு
ழுழங்கால்கள்
ஆகிய ஜந்தும்
நிலத்தில் படுமாறு(பஞ்சாங்க
நமஸ்காரம்)வணங்க
வேண்டும் 5,கொடி
மரத்தின்
எதிரில்
வணங்கிய பின்
நந்தி
தேவரிடம்
விடைபெற வேண்டும்(மானசீகமாக
விடைபெறுதல்
மிக அவசியம்) 6,ந்நிதி
தேவரிடம்
விடை
பெற்றுக்
கொண்ட பிறகு
விநாயகரை
சிவபெருமானை
ஜந்து
முறையும்
வலம் வந்து
வணங்க
வேண்டும் 7,சமயாச்சாரியர்கள்,அம்பாள்,நடராசப்
பெருமான்,பிற
தெய்வங்கள் யாவற்றையும்
வணங்கிவிட்டு,இறுதியாக
சண்டேசுவர
நாயனாரை
அடைந்து மும்முறை
கைகளால்
தாளமிட்டு,சிவதரிசனப்
பலனைத்
தந்தருளும்படி
வேண்டுதல்
அவசியமாகும் 8,சண்டேசுவர
நாயனாரிடம்
சிவதரிசனப்
பலனைப் பெற்ற
பிறகு கொடி
மரத்தின்
அருகில்
வடக்கு
முகமாக
அமர்ந்து
திரு
ஜந்தெழுத்தை (ஒம்சிவாய
நம) 108முறை
தியாத்தல்
வேண்டும் 9,இறுதியாக
பைரவரை
வணங்கி சிவச்
சொத்து
எதையும்
எடுத்துச்
செல்லவில்லை
என்று உறுதி
கூறி கோயிலை
விட்டு
வெளியே
வருதல்
வேண்டும் அன்றாடம்
திருக்கோயில்
செல்ல
முடியாதவர்கள்
குறிப்பிட்ட
புண்ணய நாட்களிலாவது
அவசியம்
சென்று வணங்க
வேண்டும்
கட்டாயமாக
சிவத்தல
யாத்திரைகளை
மேற் கொள்ள
வேண்டும் இப்படி
சிவபுண்ணியம்
பெற
விரும்பும்
சைவப்
பெருமக்கள்
துலய
தரிசனத்துடன்
நின்றுவிடக்
கூடாது எல்லா
வித
வழிபாட்டின்
சாரமாவது தூய
உள்ளத்துடன்
பிறருக்கு
நன்மை
செய்வதே
ஆகும் ஏழை
எளிய மக்கள்
நோயுற்றவர்கள்
அகியவர்களிடம்
கடவுளை கண்டு
அவர்கட்க்குச்
சேவை செய்து
உதவி
செய்கின்றவர்கள்தான்
சிவபெருமானின்
இன்னருளுக்குப்
பாத்திரமாகிறார்கள்
சிவபெருமானின் சேவை
செய்ய
விரும்புகிறவர்கள்
அவருடைய
படைப்புக்களாகிய
உலகில் உள்ள
எல்லா
ஜீவராசிகட்கும்
சேவை செய்ய
முற்பட
வேண்டும் சுயநலமின்மையே
உண்மையான
சமயப்பற்றுக்குச்
சான்றாகும்
ஒருவன் எவ்வளவுக்குத்
தன்னலமின்றிப்
பிறருக்கென
வாழ்கிறானோ
அந்த
அளவிற்கு
அவன் ஆத்ம
ஞானம்
பெற்றுச்
சிவபெருமான்
அருகே
இருக்கும்
அருகதை
யுள்ளவனாகிறான்
அப்படியின்றி
சுயநலமிக்க
ஒருவன் எல்லா
ஆலயங்கட்கும்
சென்று
அபிடேகம்
ஆராதனை செய்திருப்பினும்,அவன்
சிவபெருமானை
விட்டு
வெகுதூராம்
விலகியுள்ளவனே
ஆகிறான்
என்பது
விவேகானந்த
சுவாமிகளின்
அருள் வாக்காகும்
எனவே கடவுளை
வணங்கும்
நாம்
அனைவரும்
மிகுந்த
கருனை
உடையவர்களாக
இருத்தல்
வேண்டும்
கருணையால்
மட்டும் கருணாகரக்
கடவுளை
அடையலாம்
அல்லது வேறு
வழி இல்லை சிவாலயங்களில்
செய்யத்தகாதன 1,குளிக்காமல்
ஆலயத்திற்குள்
செல்லக்
கூடாது 2,மேல்
வேட்டி,சட்டை
முதலிய
அணிந்த
செல்லக்
கூடாது 3,வெற்றிலைபாக்கு
அருந்துதல்
எச்சில்
துப்புதல்
மலசலம்
கழித்தல்
முக்கு நீர்
சிந்துதல்
கூடாது 4,சிரித்தல்
சண்டையிடுதல்
வீண்
வார்த்தைகள்
பேசுதல்
உறங்குதல்
கூடாது 5,சிவபெருமானுக்கும்
நந்தி
தேவருக்கும்
குறுக்கே
செல்லுதல்
கூடாது 6,பலி
பீடத்திற்கும்
இறைவன்
சன்னிதிக்கும்
இடையே போதல்
கூடாது 7,அபிடேகம்
நடந்து
கொண்டிருக்கும்
போது
உட்பிரகாரத்தில்
வலம் வருதல்
கூடாது 8,வழிபாட்டை
அவசர அவசரமாக
நிகழ்த்துதல்
கூடாது 9,சுவாமிக்கு
நேராகக் காலை
நீட்டி
வணங்குதல்
கூடாது 10,
ஈரமான
ஆடை அணிந்து
செல்லுதல்
மயிர்கோதி
முடித்தல்
கூடாது 11,காலணி
குடை முதலியன
பெற்றுச்
செல்லக்
கூடாது
_____________________________________________________________________________________________________________________ ஆஸன மஹிமை 1.கறுப்பு
மான் தோலை
ஆஸனமாகாப்
பயன்படுத்தினால்
ஜஞர்ன
ஸித்தி உண்டாகும் 2.புலித்
தோலால்
செய்யப்பட்டால்
மோக்ஷமும்,செல்வஸுகமும்
கிடைக்கும் 3,மூங்கில்
பட்டை
கொண்டு
செய்தால்
நோயில்ருந்து
விடுபட
வாய்ப்புண்டு 4,கம்பளத்தில்
தயாரித்தால்;எல்லா
துயரிலிருந்து
விடுபெற
வழியுண்டு 5,ஆபிசாரம்
என்கிற ‘எவல்‘செயலை
செய்யும்
போது-கம்பளி
நீல
வண்ண்த்தி
இருக்க
வேண்டும் 6,வசிய
காரியத்தின்போது,
கம்பளி
சிவப்பு
நிறததில்
இருக்க
வேண்டும் 7,சாந்தி
காரியம்
செய்கையில்,
கம்பளி
ஆஸனமே
பயன்படுத்த
வேண்டும் 8,ஸகலவிதமான
செயல்களுக்கும்
பல வண்ணக்
கம்பள
ஆஸனம்
உபயோகிக்க
வேண்டும் 9,
கல்லால்
ஆக்கப்பட்ட
ஆஸனம்
ரோகத்தையும் 10,பூமியின்
ஆஸனம்
துயரத்தையும் 11,ஒட்டையுள்ள
மரக்கட்டை
ஆஸனம் வறிய
நிலையையும் 12,இலையாலான
ஆஸனம்
சித்த
ப்ரமையையும்
உண்டாக்கும்
என்று
இவ்வாறாக
ஆஸனம்
பற்றிய
விளக்கத்தை
அளிக்கிறார்‘வ்யாஸர்,
__________________________________________________________________________________________________________ வஸ்த்ரம்(உடுப்பு) 1,செவ்வாடைகளை
சக்தி
தேவியர்க்கும்,
ஸூர்யன்
கணேசருக்கும்
சார்த்தவும் 2,சிவபெருமானுக்கு
வெள்ளை
ஆடைதான்
பிரியம்
ஆகவே அதைச்
சார்த்தவும்
இந்த
ஆடைகள்
அழக்கற்றதாகவும்
கிழியாததாகவும்
இருக்க
வேண்டும்
பட்டாடையையும்-பஞ்சாடையையும்
பயன்படத்தலாம் உதவாத
ஆடைகள் 1,எண்ணெய்க்
கறை படிந்த
ஆடைகள்
உடுத்தினால்
நோய்
ஸம்பவிக்கும் 2,ஒட்டையாக
இருந்தால்
நிந்தனை
ஏற்படும் 3,பழைய
வஸ்திரத்தால்
வறுமை
உண்டாகும் 4,அமுக்கேறிய
ஆடையால்
ஒளி
ம்முங்கும்.இப்படிப்
பட்ட
ஆடைகளைத் தேவதேவியர்க்கு
அணித்தல்
தகாது
உடலைத்
துவட்டித்
துடைக்க தேவ
-தேவியர்களைக்
குளிப்பாட்டிய
பிறகு-சந்தனம்
தோய்ந்த
பஞ்சு
ஆடையை
துவட்ட
பயன்படுத்தலாம்
ஆனால் கூடாத ஆடை செவ்வாடையைப்
பயன்படுத்தக்
கூடாது ,அப்படிச்
செய்தால்
குஷ்டமும்-பாண்டு
ரோகமும்
வந்து
சேரும்
பட்டடையால்
துவட்டினால்
கலக்கம்
உண்டாகும்
நீலமானதோ
அழிவைத்
தரும்
கந்தம் (சந்தனம்) ஆழ்ந்த
பாவத்தையும்,அதிர்ஷ்ட்மின்மையையும்
துயரத்தையும்
அழித்து
தர்ம
ஜ்ஞானத்தை
உண்டுபண்ணுவது
இந்தச்
சந்தனப்
பூச்சு
என்கிறது ‘ ‘குலார்ணவம்‘
வேறு வகை எல்லாச்
சந்தனத்தையும்
விட
வெள்ளைச்
சந்தனம்
மிகவும்
ச்ரேஷ்ட்டமானது,ஆகவே
எப்படியாவது
முயற்சி
செய்து அதைக்
கொண்டு
வந்து
பூஜைக்குப்
பயன்
படுத்தவும் வேறு வகை 1பச்சைக்.கற்பூரம்,2.
வெள்ளைச்
சந்தனம்,3,கஸ்தூரி,4,குங்குமப்பூ
இவற்றை ஒன்றாகாச்
சேர்த்தால்
‘ஸர்வகந்தம்‘ஆகும்
இதுவே
ஸகலமான
தேவதேவியர்க்கும்
ப்ரியமானது
ஆகும்
அஷ்ட
கந்தம்(எட்டு
வகை வாஸனை) ஸகல தேவ -தேவியரின்
பூஜையின்
போது, 1,கோரோசனை,2,வெள்ளைச்
சந்தனம்,3,தேவதாரு,.4,பச்சைக் கற்பூரம்,5,க்றுப்பு
அகில்,6,சுக்கு,7,கஸ்தூரீ,8,குங்குமப்பூ
ஆகிய இந்த
எட்டு வாஸனைப்
பொருள்களைப்
பயன்படுத்துவது
விசேஷமாகும் தேவியர்க்குரிய
அஷ்ட-கந்தம் 1,குங்குமப்பூ,2,கார் அகில்,3,பச்சை,4,கற்பூரம்,5,யானை
மதநீர்,6,வெள்ளைச்
சந்தனம் ,7,கோரோசனை,8,செஞ்சந்தனம்
ஆகியவற்றைக்
கலந்த
வாஸனைப்
பொருள்களைக்
கொண்டு
தேவியரின்
சிறந்த
யந்த்ரத்தை
எழத
வேண்டும்
என்றது ஒரு
பழஞ்சுவடி, வேறு
வகை தேவ
-தேவியர்க்குக்
கீழே
குறிக்கப்படும்
மலர்களைச்
சிறிதும்
பயன்படுத்தக்
கூடாது
அதாவது 1,நாகப்பூ,2,குருக்கத்தி,3,மாதவிஎன்ற
வாஸந்திப்பூ(clustered
Hiptage-eng) 4,தாழைப்பூ,5,விளாம்பூ,6,மகிழம்பூ,7,வாகைப்பூ ,8,வேம்பூ
ஆகிய
இப்பூக்கள் தேவதைகளின்
பூஜைக்குப்
பயன்படுத்தக்
கூடாதவை வேறு வகை கட்டை
விரலால்
பூக்களைப்
பயன்படுத்தக்
கூடாது
கீழ்ப்புறமாகப்
பூத்துள்ள
மலர்களினால்
பூஜிக்கக்
கூடாது
மொட்டானதும்-பாதி
மலர்ந்ததுமான
பூக்களை
உபயோகிக்கக்
கூடாது
தர்ப்பையின்
நுனியால் இலம்
எடுத்து
விடக்
கூடாது
உலர்ந்த்தும்-நிலத்தில்
விழுந்தது
மான
மலர்களைப்
பயன்படுத்தக்
கூடாது
என்றும்
குறிப்பிடுகிறது
ஆடையிலோ கையிலோ-ஆமணக்கு
இலையிலோ
வைத்து
பூவை
உபயோகிக்கக்
கூடாது
பலனளிக்காது
போகும் மலர்களின்
தன்மை -பெருமை 1,தாமரை
மலர் ஜந்து
இரவு வரை
கெடாமல்
இருக்கும் ,2,வில்வ
இலை பத்து
இரவு வரை
அழுகாதிருக்கும்
,3,துளஸீ
இதழ்
பன்னிரண்டு
நாள்வரை அழுகாதிருக்கும்
எல்லவற்றுள்ளும்
நீலத்
தாமரையே
மிக மிகச்
சிறந்ததாகும் ‘ஸற்வேஷா
மேவ
புஷ்பாணாம்
ப்ரவரம்
நீல
உத்பலம்‘ என்று‘
யோகினீ
தந்த்ரம்
கூறுகிறது “தேவீ
புராணமோ“1,சம்பகம்,2,வள்ளி 3,மாம்பூ.4,தாமரை,5,அலரி
என இவையும்
சிறந்தவை
என்கிறது
மிகுந்த பக்தி
ச்ரத்தையோடு
கமல மலரைக்
கொண்டு
சண்டிகையைப்
பூஜித்தால் ஜ்யோதிஷ்டோமம்
என்னும்
சிறந்த
யாகத்தைச்
செய்த பலன்
கை கூடும் மனிதன்
ஸூர்ய
உலகிற்கும்
போகும்த்
திறமை
படைத்தவன்
ஆகிறான் வேறு வகை 1ஜடாமாம்ஸீ2,குக்குலு,3,வெள்ளைச்
சந்தனம்,4,காரகில்,5,கற்பூரம்6,சிலாஜித் 7,தேன்,8,கு ங்குமப்பூ
ஆகிய இந்த(௮)பொருள்களைப்
பொடித்துத்
தூளாக்கிப் பசு
நெய்யில்
வறுத்துப்
புகை
போடுவது
தெய்வ
பூஜைக்கு
மிகச்
சிறப்புடையதாகும்
என்று ‘ஸ்ரீ
சங்கரர்‘தமது
மானஸ பூஜா
ஸ்தோத்ரத்தில் கூறுகிறார் ___________________________________________________________________________________________________________ ப்ரதக்ஷிணா(வலம்
வரல்) கடவுளர்க்கு
வலது
புறத்திலிருந்து
ஈசான பாகம்
வரை வலம்
வருதலே ப்ரதக்ஷிணமாகும் வலம்
வரும் முறை 1,சத்தி
தேவிக்கு
ஒரு
ப்ரதக்க்ஷிணம்
(ஒரு சுற்று) 2,ஸூர்ய
தேவனுக்கு
ஏழு
ப்ரதக்ஷிணம்(ஏழு
சுற்று) 3,கணேசருக்கு
(3)ப்ரதக்ஷிணம்(3சுற்று) 4,விஷ்ணுவிற்கு
நான்கு
ப்ரதக்ஷிணம்(நான்கு
சுற்று) 5,சிவனுக்கு
பாதி
ப்ரதக்ஷிணம்(பாதிச்
சுற்று) சுற்ற
வேண்டும்
என்று
பெரியோர்கள்
கூறியுள்ளனர்,தந்த்ரஆகமாதி சாஸ்த்ரங்க்ளும்
இவ்வாறே
கூறும்,இவ்வாறு
வலது
புறமாக
வலம் வருவதால்
ஸத்வ குணம்
வளர்ச்சி
பெறும் சிறப்பு
நிலைகள் மலர்களைச்
சூடிக்
கொள்வதால் -
சூட்டுவதால்: 1. அழகு
மிளிரும் 2.
ஆசையைக்
கிளறும் 3.
செல்வம்
சேரும் 4. பராக்ராமம்
அதிகரிக்கும்
5. பாபக்ரஹம்
தொலையும் 6. சாந்தி
ஏற்படும்.
மேலும்
இந்தச்
சிறப்பான
மலர்களின்
சாற்றினாலே
1. குளிர்
விலகும் 2.
உஷ்ணம்
இராது 3. களைப்பு
தீரும் 4.
உடல்
எரிச்சல்
போகும் 5. வாந்தி
வராது 6.
பித்தத்தால்
உண்டாகும்
நோயும் 7. வாயில் -
முகத்தில்
உண்டான
நீயும்
கூடத்
தீரும்.
தேவ
பூஜைக்குரிய 1.
ஜாதி
மல்லிகை சூடானது,
சிறியது,
காரமானது,
கசப்பானது,
வாந்தி
யெடுக்கச்
செய்வது,
முகத்தைத்
தூய்மைப்படுத்துவது. இதனால் கப
நோய் - வாத
நோய் - முக
ரோகம் - பல்
நோய் - கண்
நோய் இவை
அனைத்தும்
தீரும். இதன்
மொட்டுகளினால்
- ரணக் கட்டி -
கண் நோய் -
குஷ்டரோகமும்
நன்கு
சரியாகி
விடும். இது
நல்ல
மணமுள்ளது.
மனம்
கவர்வது.
2.
மல்லிகை
கசப்பானது
- காரமானது.
இது ரணம் -
குஷ்டம் -
விஷம் -
இரத்த
விகாரம் -
தலை நோய் -
முக ரோகம் -
தோல்
சம்பந்தப்பட்ட
நோய்களைத்
தீர்க்க
வல்லது.
3. அடுக்கு
மல்லிகை குளுமையானது
- சிறியது -
கசப்பானது.
இது கப வாத
பித்தம்
ஆகிய
மூன்று
தோஷ்ங்களையும்,
காது - கண் -
முக
ரோகங்களையும்
போக்கவல்லது. 4. ஊசி மல்லிகை சுவையானது
-
குளுமையானது. இது
சர்க்கரை
வியாதியையும்
-
இரத்தத்திலும்
-
மூத்ரத்திலும்
சர்க்கரை
கலந்த
நோயையும் -
பித்தத்தையும்
-
எரிச்சலையும்
-
தாகத்தையும்
பலதரப்பட்ட
தோல்
வியாதியையும்
குணப்படுத்தும். 5. மாலதிப்பூ (இது
ஒருவகை
மல்லிகை) இது கபம் -
பித்தம் -
தோல்
வியாதி -
குஷ்டம்
ஆகியவற்றைத்
தீர்க்கும்.
வாந்தி
உண்டுபண்ணும்.
கட்டிகளுக்கும்
- காது
நோய்க்கும்
இதமளிப்பது. 6. வெள்ளை ரோஜா இது
குளுமையானது
- கசப்பானது -
துவர்ப்பானது. இது
குஷ்டம்
போக்குவது -
முக நோயைத்
தீர்ப்பது. பித்தத்தையும்
-
எரிச்சலையும்
அடக்குவது. 7. சிவப்பு
ரோஜா இது இரத்த
விகாரத்தையும்
- தேள்
விஷத்தையும்
- கப - வாத
பித்தங்களையும்
போக்குவது. 8.
செம்பருத்திப்
பூ இது
குழந்தைகளுக்கு
இதமானது -
எரிச்சலையும்
- சர்க்கரை
நோயையும் -
காது
ரோகத்தையும்
- உதிரப்
போக்கையும்
தடுக்கும். 9. துளஸி இது
குஷ்டம் -
கல்லடைப்பு
- இரத்த
விகாரம் -
கபம் - வாதம்
இவற்றைப்
போக்கும். 10. தாமரை இது கபம் -
பித்தம் -
எரிச்சல் -
இரத்த
தோஷம் -
விஷம்
இவற்றை
அடக்கிடும். சில
பழங்களின்
குணங்கள் 1. மாதுளை இது கப - வாத
-
பித்தத்தையும்
-
எரிச்சலையும்
-
ஜுரத்தையும்
- முக
ரோகத்தையும்
போக்கி -
நமக்கு
திருப்தி
தருவதாகும்.
மலத்தைக்
கட்டும் -
அறிவையும் -
வலுவையும்
அதிகரிக்கச்
செய்யும். 2. வாழை இது
வீர்யத்தை
விருத்தி
செய்யும்.
பித்தம்
போக்கும்.
சுவை
கொடுக்கும்.
3. தேங்காய் இது
வலிவூட்டும்
- குடலைச்
சுத்தி
செய்யும்.
பித்தத்தைப்
போக்கும். 4. சந்தனம் இது
குளிர்ச்சியான்து.
வீரியத்தை
வ்ருத்தி
செய்யும் -
பொலிவூட்டும்
-
ஜுரத்தையும்
-
முகரோகத்தையும்
- இரத்த
விகாரத்தையும்
போக்கிடும். 5. ஸிந்துரம் இது
சூடானது -
குஷ்டம் -
அரிப்பு -
விஷ்ம் -
ரணம்
இவற்றைச்
சாந்தி
செய்யும். *ஒம்* ___________________________________________________________________________________________________________________ மேலும்
ஜபம்
செய்யும்போது
இன்ன ஆஸனம்
இட்டு
அமர்ந்து
ஜபம் செய்ய
வேண்டும்
என்று
ப்ரஹமாண்ட
புராணம்
வலியுறுத்துகிறது, காம்யார்த்தம்
கம்பலம்சைவ ச்ரேஷ்ட்டம்
ச ரக்த
கம்பலம் குசாஸனே
மந்த்ரஸித்தி; நாத்ர
கார்யா
விசக்ஷணா--என்கிறது அதாவது
இருக்கையும்
ஜப
காலத்தில்
முக்கியத்துவம்
பெறுகிறது
ஆஸனமில்லாம்
ஜபம்
செய்யக்
கூடாது
மற்றவர்
போட்டு
இருக்கும்
ஆஸனத்தில்
அமர்ந்து
செய்யக்
கூடாது 1,பூமியில்
அமர்ந்து
ஜபம்
செய்தால்-துக்கம்
ஸம்பவிக்கும் 2,மூங்கிலாஸனத்தில்
அமர்ந்தால்
-நோய்
விலகும் 3,கல்லிலமர்ந்து
செய்தால்-நோய்
உண்டாகும் 4,ஒட்டை
மணையில்
அமர்ந்து
செய்தால்-துரதிர்ஷ்டம்
நேரிடும் 5,புல்லிலமர்ந்து
செய்தால்-செல்வமும்,புகழும்
அழியும் 6,இலைகளில்
அமர்ந்து
செய்தால் -சித்தப்
பிரமை
வரும் எனவே
இங்கு
ப்ரஹ்மாண்ட
புராணப்படி-இஷ்டத்தை
உத்தேசித்துச் செய்யக்கூடிய
செயல்களில்; 7,கம்பளி
ஆஸனமே
சிறப்புடையது
அதிலும்
சிவப்புக்
கம்பளம் மிகவும்
சிறந்ததாகும்
,ஸர்வ
ஸித்தி
தரும் 8,தர்ப்பை
போட்டு
அமர்ந்து
ஜபம்
செய்தால்
கட்டாயம்
ஜ்ஞான
ஸித்தி
எற்படும்
அறியவும் எந்தக்
காரிய்த்தை
உத்தேசித்து
ஜபம்
செய்யப்
போகிறொமோ
அதற்கு
ஏற்ற
வகையில்
ஆஸனம்
இருக்க
வேண்டும்
அதுவும்
கிழக்கு
அல்லது வடக்குப்
பக்கம்
பார்த்து
அமர்ந்து
செய்ய
வேண்டும்
எந்தப்
பக்கம்
பார்த்து
அமர்வது?
இதுபற்றி
உட்டீச
தந்த்ரத்தில்- ஜபேத்
பூர்வ மு,கோ,வச்யே,,, பச்சிமாம்
தனதாம்
வித்யாத் உத்த்ரே
சாந்திகம்
பவேத் ஆயுஷ்யம்
ரக்ஷா
சாந்திம் புஷ்டிம்
வா அபி
கரிஷ்யதி; அதாவது;வசீகரிப்பின்போது
கிழக்கு
முகமாகவும், தனம்
பெற
வேண்டிய
செயலின்போது
மேற்கு
முகமாகவும்
ஆயுளைக்
காக்கவும்-சாந்தியை
வேண்டியும்-வலிமை
வேண்டியும்
செயலைச்
செய்கையில்,வடக்கு
முகமாவும்,
அமர்ந்து
ஜபம்செய்ய
வேண்டும்
என்று
சொல்லப்பட்டிருக்கிறது,
சில
செயல்கள்
தவறாகும் (கூடாத
செயல்கள்) மேலும் 1,ஜபம்
செய்யும்போது
காலை
நீட்டக்
கூடாது, 2,நடுநடுவே
பேசக்கூடாது3,நகம்
கடிக்கக்
கூடாது, 4,துரும்புகளைக்
கிள்ளக்கூடாது, 5,தேகத்தை
ஆட்டக்
கூடாது, 6,மயிரைக்
கட்டக்
கூடாது ,இவை
கூடாது
எனத்
தடுக்கப்பட்டிருக்கிறது
என்கிறது
பரத்வாஜ
ஸ்ம்ருதி,
இத்தகைய
தகாத
செயல்களை
விட்டு விட்டு
நியமங்களை
கடைப்பித்து-ஜப
எண்ணிக்கையைக்
கணகிட்டுச்
செய்யம்
முற்படவேண்டும்
இதற்கு
மாலை
அவசியமாகும்
என்கிறது
ஆங்கீரஸ
ஸ்ம்ருதி விநாதர்ப்பைச்
ச யத்
க்ருத்யம் யச்ச
தானம் விநா
உதகம்; அஸங்க்யயாது
யத்ஜப்தம் தத்
ஸர்வம்
நிஷ்ப்பலம்
பவேத்; என்கிறது,அதாவது
தர்மச்
செயலுக்குத்
தர்ப்பை
இல்லாமல்
செய்யக்
கூடாது,
ஜலம்
இல்லாமல்
தானம்
வழங்கக்
கூடாது
அதேபோல்
எண்ணிக்கையற்ற
ஜபமும்
பயனில்லை
எனப்படுகிறது
எனவே
எண்ணிக்கை
வைத்துச்
செய்ய ஒரு
ஜபமாலை
அவசியமாகிறது,அது மணிமாலையாகவும்-ருத்ராக்ஷ
மாலையாகவும்-கைமாலையாகவும்
இருக்கலாம்,
மணிமாலையைவிட
ருத்ராக்ஷ
மாலையே
சிறந்தது
என உட்டீச
தந்த்ரம்
கூறும்
ருத்ராக்ஷ
மாலயா ஜப்த; மந்த்ர;-ஸர்வ
பலப்ரத; என்பதே
இந்த
ருத்ராக்ஷ
மாலை
பலனைத்
தரவல்லது ,ருத்ராக்ஷ
மாலையில் 1,முதல்14,முகம்
வரையுள்ளவை
உண்டு ஏகவக்த்ர;
சிவ;
சிவாஹஸ்யம் ப்ரஹம
ஹத்யாம்
வ்யபோஹதி; சதுர்த்
தசாஸ்ய;
ஸ்ரீகண்ட்டோ வம்சோத்தார
கர; பர;;என்கிறது ஆண்டவனுக்கு
நடத்தப்பெறும் 1,சந்தனாதித்
தைலம்
-சுகம் தரும் 2,நறுமண
திருமஞ்சனப்
பொடி -கடன்;நோய்
தீரும் 3,பால
பஞ்சாமிர்தம்
-சம்பத்து
நல்கும் 4,பஞ்சாமிர்தம்
-உடல் வலிமை
தரும் 5,பால்
-நீடிய ஆயுல்
பெறலாம் 6,தயிர்
-நன்
மக்கட் பேறு
கிடைக்கும் 7,நெய்
-வீடு பேறு
அடையலாம் 8,தேன்
-சுகம் தரும் 9,கரும்பு
சாறு
-நல் உடல்
பெறலாம் 10,இளநீர்
-போகம்
அளிக்கும் 11,எலுமிச்சம்பழம்
-பகைமையை
அழிக்கும் 12,விபூதி
-போகமும்
மோட்சமும்
நல்கும் 13,சந்னக்குழம்புபன்னீர்
-திருமகள்
வருவாள் 14,சகஸ்ரதாரை
சொர்ணாபிசேகம்
-லாபம் தரும் 15,வலம்புரிச்
சங்கு
அபிசேகம் -தீவினை
நீக்கும்,நல்வினை
ஆக்கும் 16,கலாபிசேகம்
-நினைத்தவை
நடக்கும் 17,நெல்,எண்ணெய்
- விஷஜுரம்
நிவர்த்தி 18,ஜலம்
-சாந்தி
உண்டாகும் 19,வாழைப்பழம்
-பயிர்
விருத்தியாகும் 20,வெல்லம்
-துக்க
நிவர்த்தியாகும் 21,சர்க்கரை
-சத்ரு நாசம் 22,சாதம்(அன்னம்)
-சகலபாக்கியம்
கிடைக்கும் 23,மாம்பழம்
-வெற்றியை
அருளும் பெண்கள்
கடைபிடிக்க
வேண்டியவை நெற்றிக்கில்லாமல்
ஒரு
நிமிஷங்கூட
இருக்கக்
கூடாது,
இரண்டு
கைகளாலும்
தலையைச்
சொறியக்
கூடாது பெண்கள்
பூசணிக்காயை
உடைக்கக்
கூடாது
அரிவாளாலோ மணையினாலோ
கத்தியினாலாவது
முழுக்காயை
உடைக்கலாகாது கர்பிணிகள்
தேங்காய்
உடைக்கலாகாது,தேங்காய்களை
உடைக்கும் இடத்தில்
இருக்கக்கூடாது
உடைக்கும்
அதிர்ச்சி
நுண்ணலைகள் மூலம்
கர்ப்பத்தைத்
தாக்கும் ஒரு
தம்பதிகளைச்
சேரவிடாமல்
கலைப்பது
மஹாபாவம்
அப்படிக் பிரித்து
வைத்தால்(21)
தலைமுறை பால
விதவைகள்
ஆவார்கள் என்று
நூல்கள்
கூறுகின்றன, இரவில்
வீட்டைப்
பெருக்கலாகாது
பெருக்கினாலும்
குப்பையை தெருவில்
கொட்டக்கூடாது
பகலில்
குப்பையை
வீட்டினுள்
ஒரிடத்தில்
குவித்து
வைக்கலாகாது,அப்படி
மூலையில்
குவித்து வைத்தால்
நல்ல நாளில்
எல்லோருடனும்
கலந்து
இருக்க முடியாமல்
விலக்கிவிடும் அதிகாலையில்
எழுந்து
சாணம்
தெளித்து
கோல்ம் போட
வேண்டும்
இச்செயலை
வீட்டு
எஜமானியே
செய்தால்
லக்ஷ்மி மிக
மகிழ்ச்சியுடன்
நம்
கிரஹத்திற்கு
வருகிறாள் உணவுக்கு
இலை போடு முன்
இலைக்குக்
கீழே பசும்
சாணி அல்லது
வெறும்
ஜலத்தால்
நாலு மூலை
சதுரமாகச்
சுத்தம் செய்ய
வேண்டும் கையால்
அன்னத்தையோ
காய்கறிகளையோ
பரிமாக்
கூடாது தன் கணவன்
உத்தரவின்
பேரில்
தானதர்மம்
விரதம்
உபவாஸங்கள் கணவனின்
அனுமதியின்றிப்
பிடிவாதமாகவோ
அஹங்காரத்துடனோ செய்வாளானால்
அது தன்
கணவனின் நாள்
ஆயுளைக்
குறைக்கும் எந்தப்
பொருளையும்
இல்லை இல்லை
என்று
கூறாமல்
அந்தப்
பொருள் வேண்டும்
இந்தப்
பொருள்
வேண்டும்
வாங்கி
வாருங்கள்
என்றே கூற வேண்டும்
எந்தக்
குறையையும்
எண்ணிக்
கண்ணீர்
விடக்கூடாது
அழுத
வீட்டில் செல்வம்
நிற்காது,கஷ்டம்
வந்தபோது
அசப்தங்களைக்
கூறக்கூடாது ஒரு
இலைக்குப்
பரிமாறிய
மிகுதியை
மற்றவர்களுக்குப்
பரிமாறக்
கூடாது கரண்டியால்
அமுதுகளைப்
பரிமாறினால்
அந்தத் தோஷம்
வராது மோரன்னம்
சாப்பிட்ட
பிறகு
ஒருமுறை
தனியாக
அன்னம்
எடுத்து விசாரிக்க
வேண்டும் தனக்குக்
கோபம்
வரும்படி
ஒருவர்
நடந்து
கொண்டால்
மனம் போனபடி அவச்
சொல் சொல்லி
கோபங்கொள்ளக்
கூடாது
க்ருஷ்ண,க்ருஷ்ண,சிவ சிவ,ராம,ராம
என்று கூறி
கடவுளே
இவர்களுக்கு
நல்ல
புத்தியைக்
கொடு என்று
கூற வேண்டும் தங்களது
இல்லங்களுக்கு
சுமங்கலிகள்
வந்தால்
மகிழ்ச்சியுடன்
வரவேற்று உபசரித்து
வெற்றிலை,பாக்கு
பழம்;புஷ்பம்
இவைகளைக்
கொடுத்து
உபசரிக்க
வேண்டும்,இவைகள்
இல்லாவிட்டால்
மஞ்சள்,குங்குமம்
கொடுத்து
இனிமையான
வார்த்தைகளால்
உபசரிக்க
வேண்டும் பெண்கள்
தங்களது
மார்பகம்
பூமியில்படும்படி
குப்பிறப்
படுத்துக்
கொள்ளக்
கூடாது
ஆண்களைப் போல
ஸாஷ்டாங்கமாக
நமஸ்காரமும் செய்யக்
கூடாது அதிகாலையில்
நீராடி
மடியான ஆடையை
அணிந்து
கொண்டு
அடுப்பைப் பற்றவைத்துப்
பாலைக்
காய்ச்சி
சுவாமிக்கு
நிவேதனம்
செய்து;பின்
பருகினால்
அக்னிஹோத்ரம்
செய்த பலனை
அடையலாம்
என்று
நூல்கள் கூறுகின்றன மாலை
நேரங்களில்
தீபம் எற்றி
நமஸ்கரிக்கும்
பெண்மணிக்கு
ஆசிகூறத் தேவர்கள்
இல்லங்களுக்கு
வருகின்றார்கள்
ஆதலால் தீபம்
வைக்கும்
நேரத்தில்
பெண்கள் வேறு
இடங்களுக்குச்
செல்லக்
கூடாது, வெளி
வேலைகளிலிருந்து
கணவன்
வீட்டிற்கு
வந்ததும்
கால்
அலம்பிக்கொள்ள
ஜலம் கொடுக்க
வேண்டும் தன்
குழந்தைகளுக்கும் அப்படியே
ஸந்த்யா
காலங்களில்
கணவனோ
குழந்தைகளோ
ஸந்த்யா வந்தனம்
செய்ய பஞ்ச
பாத்திரத்தில்
தீர்த்தம்
எடுத்து
வைக்க
வேண்டும் வீட்டுக்கு
விலக்கமாகிக்
குளித்த
தினத்தன்று
சமைக்கவோ
பரிமாறவோ கூடாது
அங்கனம்
செய்தால்
மந்த்ரபலம்
குறைந்து
கணவனின்
ஆயுள் குறைந்து
விடுகின்றதென்று
வைத்திய
நூல்கள்
கூறுகின்றன்ன தனக்குக்
கொடுக்கும்
புஷ்பம்
வெற்றிலை
பாக்கு பழம்
இவைகளை அலட்சியமாக
வாங்கக்கூடாது
அக்னியை
வாயால் ஊதி
எழுப்பவோ அணைக்கவோ
கூடாது உரல்,அம்மி,உலக்கை,வாயிற்படி,முறம் இவைகளில்
உட்காரக்
கூடாது
அன்னம்,உப்பு,நெய்
இவைகளைக்
கையால் பரிமாறக்
கூடாது
உப்பும்
நெய்யும்
எச்சில்
செய்தபின்
பரிமாறக்கூடாது இல்லத்
தலைவிக்குக்
கற்பாகிய
ஆடையும்
அன்பாகிய
மலரும்
நாணமாகிய
சந்தணமும்,நற்குண
நற்
செய்கைகளாகிய
அணிகலன்களும்
வேண்டும்
மக்கட் பேறே
அவளுக்குக்
செல்வம் ___________________________________________________________________________________________________ ருத்ராக்ஷச்
சிறப்பு-கணக்கும் 1முகமுள்ள
ருத்ராக்ஷம்
ஸாக்ஷாத்
சிவமே
ஆகும் இது
ப்ரஹமஹத்தி தோஷத்தைப்
போக்கவல்ல்லது
14,முகம்
உள்ளது
ஸ்ரீ
கண்டம்
என்பதாகும் இது
வம்ச
வ்ருத்தியைச்
செய்யவல்லது,
இத்தகைய
சிறப்புடைய
ருத்ராக்ஷத்தை
108-5-4-27---என்ற
கணக்குப்படி
மாலையாக்க
வேண்டும் இதைவிடக்
குறைத்து
வைப்பது
மட்டமாகும்
என்பதை அஷ்டோத்தரசதம்
கார்யா சதுஷ்பஞ்சா
ச தேவவா; ஸப்தவிம்சதி
மாநா யா ததோ ஹீனா
அதமா
ஸ்ம்ருதா;; இந்த
வரிகள்
உணர்த்தும்
,குறிப்பாக
ஜபத்திற்கு
ருத்ராக்ஷமனி
மாலையே சிறந்தது
என்றாலும்
வேறு சில
இஷ்டபூர்த்தியான
செயல்கள்
ஸித்தி பெற
வேண்டுமாயின்
சில
சிறப்புடைய
மாலைகளும்
தேவைப்படுகின்றன, 1,குறிப்பாகக்
கல்விச்
செல்வமோ-வேறு
ஸித்தி,களையோ,பெற
விரும்பிச் செயலைச்
செய்பவர்
ஸ்படிக மணி
மாலையையோ-முத்துமனி
மாலையையோ
வைத்து
கொண்டால்,ஸித்தி
பெறலாம் 2,சங்குமலை-மணிமாலை;தர்மஸித்தி
தரும் 3,தாந்த்ரீகமான
செயலைச்
செய்யும்போது
-பவழமாலை-வைரமாலை-மணிமாலை;ஸித்தியைத்
தரும் 4,ஆகர்ஷண
காலத்தில் -(ஒருவரைக்
கவர்ந்திழுத்தல்)மதம்
பிடித்த
யானையின்
தந்தத்தாலான
மாலை
ஸித்தி
தரும் 5,தாமரை
மணிமாலை
எல்லாச்
செயல்களிலும்
பயன்படும், 6,வைணவர்களுக்குத்
துளசி மணி
மாலை மிகச்
சிறப்புடையது 7,ஜப
காலத்தில்
தர்ப்பை
முடிச்சினாலான
மாலை
மிகவும்
சிறந்ததாகக் கருதப்படுகிறது
மணி
மாலையில்
ஒவ்வொரு
மணிக்கும்
இடையே முடிச்சு
இருக்க
வேண்டும் 8,சாந்தியையும்-வலிமையையும்,விரும்புவோர்
கைவிரல்
பருவங்களையே மாலையாகப்
பயன்படுத்தலாம்
எண்ணலாம் 9,இந்த
மாலைகளில்,108,மணிகளுக்கு,மேல்,இருந்தால்,அது,
ஸுமேருவைத் தாண்டுவதாகும்
,அது கூடாது, 10,ஜபம்
செய்யும்போது
ஜபமாலையைத்
துணியை
மூடி
மறைத்தபடி செய்யவும் 11,எந்த
மணிமாலையும்
கிடைக்காவிட்டால்-கையையே
மாலையாகப் பயன்படுத்தலாம்
12,ஜபம்
கையில்
எண்ணத்
தொடங்குகையில்
அநாமிகா
என்ற மோதிர விரலின்
அடிப்பருவம்
தொடங்கி
மேலே
எண்ணியபடி
ஆள்காட்டி
விரலைத்
தாண்டி
நடுவிரல்
கடைசிப்
பருவம் வரை
வந்தால்
மேருவை ஒரு
கற்றுச்
சுற்றி
வந்த
கணக்காகும்
,அது10என்ற
எண்ணிக்கையாகும் நடு
விரலின்
நடு இரண்டு
பருவங்களே
மேரு
எனப்படும்
அதைச்
சுற்றி வருவதென்பது
ஜதீஹம்,கட்டை,விரலைக்
கொண்டு,எண்ணவும்
வேண்டும் 13,காலையில்
ஜபம்
செய்கையில்
உள்ளங்கையை
நீட்டி
நேராக
வைத்தபடி விரல்களைம்
மட்டும்
உயர்த்தியபடி
தொப்புள்
வரை
வைத்துக்
கொண்டு ஜபம்
செய்யவும்
நடுப்பகலில்
இதயம் வரை
உயர்த்திப்
பிடித்துக்
கொண்டு செய்யும்,மாலை
வேளையில்
மூக்கு வரை
உயர்த்திப்,பிடித்தபடி
செய்யவும் ஜப
பலன் 1,வீட்டில்
அமர்ந்து
செய்தால்
ஒரு பங்கு
பலன் வரும், 2,பசுவுக்கு
எதிரில்
ஜபித்தால்100
பங்கு பலன்
உண்டு, 3,தோட்டம்-காடு-ஜலக்கரைகளில்
செய்தால்1000-ம்
பங்கு பலன் 4,மலை
மீது
இருந்து
செய்தால் 10000-ம்
பங்கு பலன்
உண்டு 5,நதிக்கரையிலிருந்தபடி
செய்தால்
லக்ஷம்
மடங்கு
பலன் 6,தெய்வாலயத்தில்
ஜபித்தால்
கோடி குணம்
பலன் உண்டு 7,சிவனுக்கு எதிரில் செய்தால் ஏராள குணம் ப தாய்
தந்தையர்க்குப்
பணிவிடை
தாய்க்கும்,
தகப்பனார்க்கும்
அவர்கள் மனம்
கோணாமல் பணிவிடை
செய்யவேண்டும் நல்லவர்
சேர்க்கைப்
பயன்; ஸாதுக்களுடன்
சேர்க்கையும்,தீயவரின்
சேர்க்கையைத் தவிர்த்தலும்
மிகவும்
அவசியமானது காலையில்
காணத்
தக்கவர்கள் கபிலபசு(காராம்
பசு) துளசி
கண்ணாடி,கடவுள்,அரசன்,குரு உணவு
அளிப்பவன்.வேதம்
ஒதிய
வித்வான்,
பதிவ்ரதை
மனைவி,அக்னி,யாகசாலை,
ஆகியவற்றினைக்
காலையில் தரிசனம்
செய்தால்
எல்லாத்
தீமைகளும்
விலகும் மிகவும்
அரிதானவை; கணவனுக்குப்
பனிவிடை,விஷ்ணுவின்
பூஜை,துளசி
சேவை பிராணிகளிடத்து
தயை,இராம கதை
கேட்டல்,நல்ல
கதைகளைக் கேட்க
விருப்பம்
ஆகியவை
மிகவும்
கிடைக்க
அரிதானவை காலையில்
வணங்கத்
தகுந்தவர்கள் தாய்,
தந்தை,மூத்த
சகோதரன்,
ஆசார்யன்,
வயதானவர்கள் இவர்கள்
யாவரையும்
காலையில்
தவறாமல்
வணங்க
வேண்டும் வித்தைக்கு
விரோதிகள்
குரு
சொல்வதைக்
கேட்க
விருப்பமில்லாமை,அவசரப்படுதல், தற்புகழ்ச்சி
ஆகிய
இம்மூன்றும்
வித்தைக்கு
விரோதிகள், இவற்றினைத்
தவிக்க
வேண்டும், அணுகுப்
பழகத்
தக்கவர்கள் ஆறிவு,கல்வி,வயது,நன்னடத்தை,நெஞ்சுரம்,ஞாபசக்தி.மனதடக்கம் இவற்றில்
உயர்ந்தவர்கள்,இயற்கையை
அறிந்தவர்கள்,கவலைற்றவர்கள் எல்லா
உயிர்களிடமும்
மலர்ந்த
முகமுடையவர்கள்,அமைதியுற்றவர்கள்
பாராட்டப்பட்ட
விருதுகளை
உடையவர்கள்
நல்வழி
கூறுபவர்கள்
கேட்பதாலும்,பார்ப்பதாலும்,புண்ணியத்தை
உண்டாக்கக்
கூடியவர்கள் ஆகியோர்
அணுகிப்
பழகக்
கூடியவர்கள் இரவு
தூக்கத்தின்
அளவு; ஆறு
மணி நேரம்
தூங்குகிறவன்தான்
தன்
நிலைமையில்
அதிக அளவில் சாந்தியை
அடையத் தகுதி
பெறுகிறான்(தக்ஷஸ்ம்ருதி) மனிதனின்
சிறந்த
ஜச்வர்யம்
பணமில்லாது
போனாலும்,
ஆரோக்யம்,படிப்பு,நல்லோர்களின
ஸ்நேகம்,உயர்குலப்
பிறவி,சுதந்திரம்
இவை ஜந்தும்
மனிதர்களின்
ஜச்வர்யம் தவிக்க
வேண்டியவர்கள் கத்தி
முனையில்லும்
பழகலாம்,மரத்தடியில்
வசிக்கலாம்,பிச்சை
எடுத்துப் பிழைக்கலாம்,
பட்டினி
கிடக்கலாம்,கொடிய
நரகத்தில்
துன்பங்க்ளை அனுபவிக்கலாம்,ஆனால்
பணத்திமிர்
கொண்ட
உறவினர்களை
அண்டி வாழக்கூடாது, எவை
எவை அதிகமாக
இருக்க
வேண்டும், அதிகமான
கல்வி,அதிக
சிரத்தை,அதிக
புண்யம்
அதிகக்கேள்வி,அதிக
உத்ஸாஹம்,அதிகப்
புகழ்,அதிக
தைரியம்
இவற்றினை
எப்போதும்
அவசியம்
சம்பாதித்துக்
கொள்ளவேண்டும், எவை
எவை அதிகமாக
இருக்கக்ககூடாது; அதிகமான
ஆகாரம்,அதிகக்
கோபம்,அதிக
துக்கம்,அதிகமான
சிரமம்,
அதிகப்பேச்சு,அதிக
விளையாட்டு
இவற்றினை
எப்போதும்
தவிர்க்க
வேண்டும்
குடி
இருப்பதற்கு
எற்ற ஊர்; தண்ணீர்,மருந்து,ஸமித்து,மலர்,புல்,விறகு
ஆகியவற்றை
மிகுதியாகக்
கொண்டுள்ளதும்,செழிப்புள்ளதும்,நன்மைபயக்கக்
கூடியதும்,அழகிய
சுற்று வட்டாரங்களை
உடையதும்,புலவர்களுடன்
கூடியதுமான
ஊரில்
இருக்கவேண்டும் படுக்கையில்
தலை வைத்துப்
படுக்க;
படுக்கையில்
வடக்கு,மேற்குத்
திக்குகளில்
தலை வைத்துப்
படுக்கக்கூடாது,படுக்கையில்
தவறாகப்
படுத்ததால்
திதி
தேவியின்
கர்பத்தினை
இந்திரன்
சிதைத்தான் மஹான்; ஆபத்துக்
காலத்தில்
தைர்யத்துடன்
இருப்பவனே
மஹான், முன்னேற்றத்திற்கு
இடையூறானவை; சோம்பல்,ஸ்த்ரீகளிடம்
அதிகப்
பற்றுதல்,உடல்
நலமில்லாமை,தன்
பிறந்த இடத்தின்
மீது
பற்றுதல்,கிடைத்ததே
போதும் என்ற
எண்ணம் பயம்
ஆகியவை ஆறும்
முன்னேற்றத்திற்குத்
தடையானவை
தவிர்க்கப்
படவேண்டும் குல
நாசத்திற்குக்
காரணம் தகாத
விவாக
சம்பந்தம்,அனுஷ்டானம்
இன்மை,வேதம்
ஓதாமை,
பிராம்மண்னை
அவமதித்தல்
ஆகியவை
குலநாசத்திற்குக்
காரணங்களாகும் பிறரின்
வாகனம்,படுக்கை,ஆசனம்,கிணறு,தோட்டம்,வீடு
இவற்றினை
அனுபவிப்பவன்
சொந்தக்
காரனின்
கால்பங்கு
பாவத்தை
அடைகிறான் அநியாயமாய்ப்
பணம்
சேர்த்தவர்,பத்தர்,குடியானவன்
இவர்களது
கிணற்றில்
ஸ்னானம்
செய்யக்கூடாது பர்வ
காலத்தில்
ஒரு தடவை
ஸமுத்ரஸ்நானம்
செய்தால்
நூறு ஆயிர
ஜன்ம பாபம்
தொலைகிறது,மனைவி
கர்ப்பிணியாக
இருக்கும்
போது வெகுதூர
யாத்திரையும்,க்ஷவரம்,ஸமுத்ர
ஸ்நானம்,பிணம்
சுமப்பது ஆகியவற்றினை
விலக்க
வேண்டும், ஒரு
நதியில்
ஸ்நானம்
செய்யும்போது
மற்றொரு
நதியினை
நினைத்தாலோ
புகழ்ந்தாலோ
புண்ணியம்
யாவும்
போய்விடுகிறது அஸ்தமித்த
பிறகு
நதியில்
ஸ்நானம்
செய்யகூடாது, வண்ணான்
துறையில்
ஸ்நானம்,விபசாரி
வீட்டு உணவு,மேற்கே, வடக்கே
தலைவைத்துப்
படுத்தல் இவை
இந்திரனாய்
இருந்தாலும் ஸம்பத்தை
அழித்துவிடும், தந்தைப்
பூஜை செய்து
வருபவன்
வேதம் ஒதும்
அவசியமில்லை பெரியோரைத்
தூற்றுகிறவன்
மட்டும்
அன்றி
அவனுக்குச்
செவி சாய்ப்பவனும்
பாவத்தை
அடைகிறான், பிறருடைய
உணவு,பிறருடைய
உடை,பிறருடைய
படுக்கை,அந்நிய ஸ்த்ரிகள்,அந்நியருடைய
வீட்டில்
வாஸம்,இவை
எல்லாம்
தேவேந்திரனுடைய
ஜஸ்வயத்தைக்
கூட
அழித்துவிடும் மஹான்களின்
சேர்க்கை; கங்கை
பாபத்தைப்
போக்கும்,சந்திரன்
தாபத்தை
நீக்கும்,கற்பக
விருஷம் வறுமையைப்
போக்கும்,மஹான்களின்
சேர்க்கையோ
எனில் பாபம்,தாபம் வறுமை
ஆகியவற்றினையும்
போக்கடித்துவிடும், தீய
சகுனங்கள் பூனையின்
குரல்,சண்டை,தர்சனம்
இவை மூன்றும்
நல்லதல்ல,ஒருவன் தும்மினால்
காரியம்
ஆகாது,பசு
தும்மினால்
மரணமும்
எற்படலாம் பாவம்
செய்யாதே பாபம்
குறைவாக
இருந்தாலும்
அது ஒரு
நாளும்
பயனற்றதாக
ஆகாது அது
உடனே
காணப்படாமடல்
இருக்கலாம்
ஆனால்
காலப்போக்கில் பாபம்
செய்தவனை
அழித்தே
தீரும்,
நீரில்
தெப்பக்கட்டை
மிதந்து
வருவது போல்
துக்கக்
கடலினை
தர்மங்களைச்
செய்ததால்
கனம்
அற்றவர்களாக எளிதில்
கடந்து
விடுகின்றனர்,நனைந்த
துணி நீரில்
அமிழ்ந்து
விடுவது போல்
பாபங்களைச்
செய்து கனமாக
இருப்பவர்கள்
துக்கக்
கடலில்
ழுழ்கி விடுகின்றனர்,ஆதலால்
பாபத்தை
ஒருபோதும்
செய்யக்கூடாது நல்ல
சகுனங்கள் பெண்
இனத்தைச்
சேர்ந்த
ஆந்தை,வீட்டுப்
பல்லி.குயில்,புழு,
பன்றி,நாய்,நரி
இவை பிரயாணம்
செய்பவனுடைய
இடது
பக்கத்தில்
சென்றாலும்
எதிர்நோக்கி
வந்தாலும்
நல்லது,அழகான
கிளி இடது
பக்கத்தில்
இருந்தாலும்,பார்க்கப்பட்டாலும்
,சென்றாலும்,எல்லாக்
கார்யங்களும்
சித்தி பெறும்,நாய்
இடது
பக்கத்தில்,எதிர்நோக்கி
வந்தாலும்,மான்
இடது
பக்கத்தில்
சென்றாலும்
நலம்,கரடி,குரங்கு
இவற்றினைப்
பார்த்தாலோ குரலைக் கேட்டாலோ மங்களகரமானது. ___________________________________________________________________________________________________________ இனங்களில்
உயர்ந்தவை 1,மரங்களில்
உயர்ந்தது
சந்தனமரம் 2,
நதிகளில்
உயர்ந்தது
கங்கைநதி 3,விரதங்களில்
உயர்ந்தது
திங்கட்கிழமை
விரதம் 4,நிலங்களில்
உயர்ந்தது
காஷ்மீரம் 5,தலங்களில்
உயர்ந்தது
சிதம்பரம் 6,ரிஷிகளில்
உயர்ந்தது
வசிஷ்டர் 7,முனிவர்களில்
உயர்ந்தது
நாரதர் 8,
நவமணிகளில்
உயர்ந்தது
பதுமராகம் 9,மலர்களில்
உயர்ந்தது
தாமரை
10,கற்பினில்
உயர்ந்தது
அருந்ததி 11, பலத்திலே
உயர்ந்தது
புயல்
காற்று 12,
யானைகளில்
உயர்ந்தது
ஜராவதம் 13,பசுக்களில்
உயர்ந்தது
காமதேனு 14,தமிழ்நூல்களில்
உயர்ந்தது
அகத்தியம் 15,மந்திரங்களில்
உயர்ந்தது
பிரணவமந்திரம் 16,கடலிலே
சிறந்தது
திருப்பாற்கடல் 17,உயரத்திலே
சிறந்தது
மகாமேருமலை
------------------------------------------------------------------------------------------------ ஆலயப்பகுதிகள்;
தீய சகுனங்கள்
(தகுதி) ||Saanthi, Saanthi, Saanthi:||
|
This website is constructed & Managed by TRS Iyengar |