May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in Where you can experience the Modern Trend with Ancient Values !

 

கறுப்பு நாயுருவி

கறுப்பு நாயுருவிக் கஷாயத்தை ஐந்து மதிக் கர்பிணிக்கு அடிக்கடி மூன்றுதர மீந்தால்-தசமதியாய்-அஞ்சு கடிகைக்குள் தத்துவ பூர்த்தியாய்ச் சுகப் பிரசவமாம்.

வேறு குறிப்பு

கறுப்பு நாயுருவிக் கஷாயம் 5 மாதத்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க, கொடுத்த ஐந்து நாழிகைக்கிள் 10 மாதத்துப் பூர்ண கர்ப்பம் உண்டாய்ப் பிரசவமாகும்,

குளிர்ந்த கொள்ளி

குளுந்த கொள்ளி யென்பதைக் கசக்கிக் குக்குடாண்டத்திற்குக் கவசித்து இரண்டரைக் கடிகை மூடிவைத்தால்,நவீனமான பார்ப்பு ஜனிக்கும்,

வேறு குறிப்பு

குளிர்ந்த கொள்ளி என்னும் பச்சிலையைக் கசக்கிக்குக்குட அண்டத்தின் கீழும் மேலும் வைத்து மூடிய இரண்டரை நாழிகைக்குள் கரு முற்றிக் குஞ்சு பொரிக்கும்.

தீப்பூடு

தீப்பூடு நசுக்கி இறந்த கிளி முதலிய பறவைகளின் வலது காதில் வைக்க அவை பிழைக்கும்.

வேறு குறிப்பு

தீப்பூடு பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் பிழைப்பான்.

முத்துப் பூண்டு

முத்துப்பூண்டுச் சாற்றை எல்லாப் பக்ஷிகளின் காதிலும் சிறுகச் சிறுக இரண்டரை நாழிகை பிழிய சீவிக்கும், வேறு குறிப்பு
முத்துப் பூண்டுச் சாற்றை இறந்துபோன பக்ஷி எது ஆனாலும் அதன் மேல் சிறுகச் சிறுக இரண்டரை நாழிகை பிழிந்தால் பிழைக்கும்,

கருங்காந்தள்

கருங்காந்தளிலையைக் கசக்கி வெட்டுண்ட கைத்துண்டைச் சேர்த்து மேற்படி மூலிகையை யப்பிக் கட்டக் கைகூடு,

வேறு குறிப்பு

கருங்காந்தள் இலையைக் கசக்கி,வெட்டுப்பட்ட துண்டுகளைச் சேர்த்து அவற்றோடு சேர்த்துக் கட்டி இரண்டரை நாழிகை வைத்திருந்தால், துண்டுகள் ஒன்றாய்ச் சேர்ந்து போகும், 

இருமலுக்கு

முசுமுசுக்கை சமூலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு கியாழமாக்கிப் பாலொடு கொள்க, மேற்படி சூரணத்தில் மிளகு சர்க்கரை சிறுக சமன் சேர்த்துங் கொள்க இவ்வாறு கரிசாலையுங் கோள்க பின்பு பனையோலை சுட்ட சாம்பலைப் பால்விட்டு அரைத்துப் புடஞ்செய்து நெய் சர்க்கரை வெண்ணெய் தேனிலுங் கொள்க இது போல் மேற்படி பூகாய்ந்ததை பஸ்பஞ் செய்து கொள்ளத் தீரும், 

தேகமெலிவு,ஈளை, சுக்கிலக்கெடுதிக்கு
பொன்னாங்கண்ணி ஒருபங்கு கரிசலாங்கண்ணி முக்கால்பங்கு இவை ஒருமுறை வேகவைத்து,தண்ணீர் வடித்து சீரகத்தால் தாளித்துப் புரட்டிச் சாப்பிடவும்,நீர்க்கோவை, வாதபித்த ஆபாசக்கெடுதி,மலபந்தம்,சூலை இவற்றிற்கு சுக்கு பலம் 12-க்கு சுண்ணாம்பில் 4 பலம் கவசித்து, மஞ்சளில் 4 பலம் கவசித்து,எருமைச் சாணத்தில் 4 பலம் கவசித்து, கவசங் கருகச் சுட்டு எடுத்து நசுக்கி அரைப்படி சலத்தில் போட்டுக் காய்ச்சி வீசம்படியாகச் சுண்டின பின்பு,பனங்கற்கண்டு நெய் இவைகளைக் கலந்து இளஞ்சூடாகச் சாப்பிட்டு வரவேண்டும், தேகவலிவு,சரீர திடத்திற்கு கெட்டி மிளகு பலம் 20-இதைப் பேயன் வாழைக் கிழங்குச் சாற்றில் 3 நாள்,இளநீரில் 3 நாள்,கரிசாலைச் சாற்றில் 3 நாள்;பசும்பாலில் 3 நாள் தனித்தனியாக இரவில் ஊறவைத்து,பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து முன் போலவே எல்லாவற்றிலும் நனைத்து உலர்த்தித் தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு,சுமார் 5 மிளகு அவ்வளவு கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட்டு வரவும், கற்கண்டு இல்லாமலும் கொள்ளலாம், சூடு கொண்டால் அறுகம்வேர் கஷாயத்தில் பசுவெண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம்,இவ்விதம் சிலதில் ஊறவைத்துக் கடுக்காயும் கொள்ளலாம்,

பஞ்ச கற்பம்

கஸ்தூரி மஞ்சள்,வேப்பம் பருப்பு,வெள்ளை மிளகு,கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல் இவைகளை அரைத்துப் பாலில் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும், வேறு வகை
கசகசா,பாதம்பருப்பு,கொப்பரைத் தேங்காய், மிளகு,சீரகம் இவற்றைப் பாலில் அரத்துக் காய்ச்சி,நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும்,

நீலகண்ட மணி

மாந்தாளிக்கள்ளி,சதுரக்கள்ளி,வெள்ளெருக்கு வேர்ப்படை,இவைகளைச் சமன் எடையால் நிழலில் உலர்த்திக் கொண்டு ஐந்து பலம் குழித்தைலம் வாங்கிக் கொண்டு,சுரைக் குடுக்கையில் வைத்துக் கொண்டு பெருங்காயம், லிங்கம்,அபினி,இந்த மூன்றும் ஒவ்வொரு பலம் கல்வத்திற் போட்டுப் பொடித்துக் கொண்டு,குங்குமப்பூ,கஸ்தூரி,கோரோசனை,பச்சைக் கற்பூரம், கூகை நீறு இந்த ஐந்தும் வகைக்கி ஒன்றேகால் வராகனெடை சேர்த்து, தைலத்தை விட்டு எட்டு ஜாமம் அரைத்து,குன்றிமணிப் பிரமாணம் மாத்திரை செய்து தங்க டப்பியில் வைத்துக்கொண்டு,வாந்தி பேதி கண்டவர்களுக்கு மணிக்கு மூன்று மாத்திரை வீதம் தேனில் கொடுத்தால் வாந்தி பேதி நிற்கும்,ஜன்னி வகைகளுக்கும் பிரயோகிக்கலாம்,நல்லபாம்பு முதலிய விஷ திருஷ்டிகளுக்கும்,தகுந்த அனுபானங்களில் பிரயோகிக்கலாம்,இந்த மாத்திரைக்கு விஷ்ணு வைத்த பெயர் பிரளய கால ருத்திர மணி மாத்திரை சிவனிட்ட பெயர் நீலகண்ட மணி மாத்திரை இது நாடியில் சொல்லியது, 

சூரியனிடத்தில் பொன்னிருக்கின்றது

பிண்ட ஒளியும் அண்ட ஒளியும் 1, ஆன்ம ஒளி-அக்கினி ஒளி 2, ஜீவ ஒளி -சூரிய ஒளி 3, மன ஒளி-சந்திர ஒளி 4, கண்ணொளி- நட்சத்திர ஒளி 1, வடகுப் பாகம்,நக்ஷத்திரப் பிரகாசம், 2, கிழக்குப் பாகம்,சந்திரப் பிரகாசம் 3, மேற்குப் பாகம்,சூரியப் பிரகாசம், 4, தெற்குப் பாகம்,அக்கினிப் பிரகாசம், கிழக்குத் -க்கை நோக்கித் தியானம் செய்கிறது போகசித்தியைப் பெறுகிறதற்கு மேற்கு-சொர்ண சித்தியைப் பெறுகிறதற்கு தெற்கு-(நித்திய தேகத்தையும் ஞானசித்தியையும்) பெறுகிறதற்கு வடக்கு - சித்தசுத்தியைப் பெறுகிறதற்கு கடவுள் காரியப்படுவது கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க,சிலாவிக்கரக பூததாரு முதலியவைகளில் வெளிப்படுத்திக்கொள்வது மந்த நியாயம்,அதில் தோன்றி அனுக்கிரகிப்பதாகச் சொல்லுவது ஜாலம்,காய்ந்த கட்டையினிடத்தில் அக்கினி அதி சீக்கிரம் பற்றுதல்போல்,பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்தமாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும்,பக்குவ மில்லாதவர்க்கு அருள் செய்தாலும் வாழையினிடத்தில் அக்கினி செல்வது போலவாம் ஆதலால்,கடவுள் அருள் வெளிப்படுவதற்குமுன் அபக்குவர்கள் தங்கள் செயற்கையாகிய ராகத்துவேஷாதி அசுத்தங்களைப் போக்கிக்கொள்வது உத்தமம் கோபம்
சினம் வெகுளி யென்பவற்றின் பொருள் சினம் உள்வேக்காடு,புடநியாயம் போல்,இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும் வெகுளி மீசை துடித்தல் கண்சிவத்தல்,கைகால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிப்படையாகக் காட்டுதல்,இதுவும் ஆயுளை நஷ்டம் செய்யும் ஆகையால் எந்த வகையிலுங் கோபங் கூடாது அதை அவசியம் ஒழிக்க வேண்டியது,

காமக் குரோதங்கள்
காமக் குரோதாதிகள் முதலிய பெருங் குறைகளை அவசியம் நீக்க வேண்டியது, காரணம் காரணமென்பது கரண சந்பந்தமுடையது,காரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழில் தன்மை யுடையது மட்குடத்தைப்போல்

இலக்ஷணம்

இலக்ஷணம் அடையாளம்;இலக்ஷியம் அடையாளத்தை உடையது;அங்கம் இலக்ஷணம்

உப்பு தேக நஷ்டஞ் செய்வது உப்பு,உப்பைக் கட்டியாகரத்திற் சேர்ப்பது சித்தமார்கம்,

சர்க்கரை

சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலினுத்தமவாகாரமாம் மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்,

1, பிருதிவி-பொற்சபை 2, அப்பு-ரஜிதசபை 3, தேயு-தெய்வசபை 4,வாயு-நிருத்தசபை ஏழு திரைகள் 1, கறுப்பு திரை மாயாசத்தி 2, நீலத்திரை கிரியாசத்தி 3,பச்சைத்திரை பராசத்தி 4, சிவப்புத்திரை இச்சாசத்தி 5, பொன்மைத்திரை ஞானசத்தி 6, வெண்மைத்திரை ஆதிசத்தி 7,கலப்புத்திரை சிற்சத்தி

ரசவாதம் ஏழு 1,ஸ்பரிசவாதம் -குரு சம்பந்தத்தால் 2, ரசவாதம் -ஓஷதி சம்பந்தத்தால் 3,தூமவாதம் - புகைவேதியால் 4, தாதுர்வாதம் -பஞ்சலோகங்களால் 5, வாக்குவாதம் - சொல்லால் 6, அக்ஷுவாதம் -பார்வையால் 7, சங்கல்பவாதம் - தியானத்தால்---செய்யப்படும்

உபரசவாதம் ஏழு 1, மந்திரவாதம் -எழுத்துகள் சம்பந்தத்தால் 2,புரீஷவாதம் -மலமூத்திரத்தினால் 3, தூளனவாதம் -பாததூளிகை சம்பந்தத்தால் 4,வாயு பிரேரகவாதம் -சுவாச சம்பந்தத்தால் 
5, தேவாங்கவாதம் - உபாசனையினால் 6, பிரவேச விசிரிம்பித வாதம் ---
பூத தாதுவால் 7, தந்ரவாதம் -நிரேதுவாக -செய்யப்படும்,

நவநிலை

1,விந்து 2,நாதம் 3,பரவிந்து 4, பரநாதம் 5,திக்கிராந்தம் 6,அதிக்கிராந்தம் 7,சம்மௌனம் 8,சுத்தம் 9,அதீதம்

|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed & Managed by TRS Iyengar