www.kalyaanam.co.in
|
நமது இந்து மத தர்மத்தில் எத்தனையோ நற்பழக்கங்களை பெரியவர்கள் உண்டாக்கியுள்ளனர். ஆனால் காலப்போக்கில் இவையனைத்தும் கண்மூடித்தனமான பழக்கங்கள் என்று உதறிவிடுகின்றனர். இன்று விஞ்ஞானம் கூறுவதை அன்றே நம் ஆன்றோர்கள் அன்றாட நடைமுறையில் பழக்கியுள்ளனர். இன்று மடி, ஆசாரம் என்ற வார்த்தைகளை கேட்டாலே ஒதுங்கும் இளையதலைமுறையினர்களுக்காக விஞ்ஞான பூர்வமான விளக்கம் இதோ!
ஆச்சாரம் ! என்ற சொல்லைக்கேட்டாலே முகம் சுளிக்கின்றனர் இன்றய இளைஞர்கள்; ஏதோ கடினமான செயல் என்றும் தங்களால் கடைபிடிக்கமுடியாத விஷயம் என்றும் கருதுகின்றனர். ஏனென்றால் நம்பெரியோர்கள் தங்கள் குழந்தை-களுக்கு அதனைப்பற்றி தெளிவாக சொல்லாததே காரணம்.
ஆச்சாரம் என்பது விஞ்ஞான அடிப்படையில் எழுந்த சுகாதரமேயன்றி, வேறு இல்லை. அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும், அப்போதுதான் நம்மைச்சுற்றி சுத்தமான ஆரோக்ய-மான காற்றுமண்டலம் இருக்கும். அந்த வேளையில் காற்றை சுவாசித்தால் உட-லிலிருந்து அசுத்த காற்றுவெளியேறி சுத்தமான காற்று உள்ளேச்சென்று உடல் ஆரோக்யமாக இருக்கும். பிறகு பல்துலக்கிவிட்டு நன்றாக வாய் கொப்பளித்-தப்பிறகேதான், காபி போன்ற பானங்களை குடிக்கவேண்டும்.. இல்லையென்றால் முதல்நாள் இரவு சாப்பிட்ட உணவு துணுக்குகள் பல் இடுக்களில் தங்கி, வியாதி கிருமிகளாக மாறி நம் வயிற்றுக்குள் சென்று பல வியாதிகளை உண்டு பண்ணும்.
பிறகு குளியலறைக்குச்சென்று நம் உடைகளைத் தண்ணீரில் நனைத்துவிட்டு, நன்-றாக உடலைத்தேய்த்து தலைக்கு குளிக்கவேண்டும். ஏனென்றால் நாம் வெளி-யில் சென்றுவிட்டு பலதரபட்ட மக்களுடன் பழகிவிட்டு வருகிறோம். அவர்-களிடமிருந்து வியாதிகிருமிகள் நம் தலை மயிரிலும் உடைகளிலும் படிந்து இருக்கும். பிறகு துவைத்து வெயிலில் காயவைத்த ஆடைகளை அணியவேண்டும்.
அந்தநாளில் பெண்கள் வெளியில் செல்லமாட்டார்கள். ஆகவே அவர்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் விரத நாட்களில்மட்டும் தலைக்குக் குளித்தனர். பெண்கள் குளித்தபிறகே சமையல்கட்டிற்குவந்த சமையல் வேலைகளைத் துவங்கவேண்டும். குளிக்காமல் பழைய உடையுடன் சமைத்தால், உடையில் படிந்திருக்கும் நோய் கிருமிகள் சமைக்கும் பண்டங்களின்மீது படியும். சமையலறையை அடிக்கடி பெருக்கி, துடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் பூச்சிகள், கிருமிகள் உணவுப்பொருள்களில்விழ வாய்ப்புண்டு.
சமைத்த பண்டங்களை எப்போதும் கண்டிப்பாக மூடியே வைத்திருக்கவேண்டும், பறிமாரும் நேரம்தவிற. குறிப்பாக சாதத்தை மூடியே வைத்திருக்க-வேண்டும். ஏனெனில் அதில்தான் கிருமிகள் அதிகம் படியும். அந்தக் காரணத்திற்காகத்தான் சாதத்தை தொட்டகையால் மோரைத்தொடக்கூடாது என்பர். இல்லையெனில் மோர் கெட்டுவிடும். சமைத்த பண்டங்களையும் அதே காரணத்திற்காகத்தான் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்க கூடாது என்பர். சாப்பிட உட்காருமுன் கை, கால்களை நன்றாக கழுவிக்கொண்டு உட்காரவேண்டும். ஏனென்றால் நம் கைகளில் நமக்குத்தெரியாமல் கிருமிகள் படிந்திருக்கும். அவைநாம் உண்ணும் உணவுடன் வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம்.
வெளியிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ திரும்பி வந்ததும் நேராக குளியலறைக்குச்சென்று கை, கால்களை நன்றாகக் கழுவிக்கொண்டு, நாம்அணிந்திருந்த ஆடைகளைத் தண்ணீரில் நனைத்துவிட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், சலூனுக்குச் சென்று முடி-வெட்டிக்கொண்டுவந்தால் அங்கு பலதரபட்ட மக்கள் வந்திருப்பாரகள் அவர்களிடமிருந்து வியாதிகிருமிகள் நம் தலை மயிரிலும் உடைகளிலும் படிந்து இருக்கும் ஆகவே நேராக குளியலறைக்குச்சென்று நாம்அணிந்திருந்த ஆடைகளைத்-தண்ணீரில் நனைத்துவிட்டு தலைக்குக் குளித்துவிட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அதுபோலவே இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்றால், அங்கு இறந்தவரின் உடலிலிருந்து வியாதிக்கிருமிகள் அந்த வீடுமுழுவதும் காற்றில் பரவியிருக்கும் மேலும் அங்கும் பலதரபட்ட மக்கள் வந்திருப்பாரகள்; அவர்களிடமிருந்தும் வியாதிகிருமிகள் நம் தலை மயிரிலும் உடைகளிலும் படிந்து இருக்கும். ஆகவே நேராக குளியலறைக்குச்சென்று நாம் அணிந்திருந்த ஆடைகளைத் தண்ணீரில் நனைத்துவிட்டு தலைக்குக் குளித்துவிட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
வடக்குப்புறம் தலைவைத்துப் படுக்ககூடாது. காரணம் வடக்குப்பக்கம் பூமியின் ஆகர்ஷணசக்தி அதிகம். அதனால் நம் மூளை பாதிக்கப்படலாம். நகங்களைக் கடிக்கக்கூடாது, காரணம் நக இடுக்குகளில் சேரந்திருக்கும் அழுக்களும், நகத்துணுக்குகளும் நம் வயிற்றுக்குள் சென்று வியாதிகளை உண்டுபண்ணும்.
அந்தநாளில் வீட்டிற்கு ஒருபெரியவர் வந்து, அவருக்கு நாம் குடிக்க ஏதாவது தந்தால், முதலில் தங்கள் கைகளில் ஜலம்விடச்சொல்லித் தங்கள் கைகளை கழுவிக் கொண்டபிறகே டம்பளரை வாங்குவர். காரணம் அவர்கள் கைகளில் படிந்திருக்கும்ம நோய்கிருமிகள் டம்பளரில் படியவேண்டாமென்ற நல்லெண்ணமே. ஆனால் இன்றைய இளையசமுதாயமோ எதையும் எச்சில் படுத்திதான் குடிக்கின்றனர். அதனால் அவர்கள் உதட்டிலிருந்து நோய்கிருமிகள் டம்பளிரில் படிந்து அதே டம்பளரை வேறு ஒருவர் பயன்படுத்தும்போது அது அவர்களுக்கும் பரவும் என்று தெரியாத காரணமா, இல்லை நாகரீகமா தெரியவில்லை.
மொத்தத்தில் யாம்பெற்றபேறு பெருக இவ்வையகம் என்ற பரந்தநோக்குடன் எல்லோருக்கும் நோய்கிருமிகளை வாரி வழங்குகின்றனர். இப்போது புரிந்ததா ? ஆச்சாரம் என்றால் விஞ்ஞானரீதியான சுகாதாரம்தானென்று. உங்கள் குழந்தைகளையும் இந்தக்கட்டுரையைப் படிக்கச்சொல்லுங்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாதென்றால் நீங்கள் படித்துச்சொல்லுங்கள். விளக்கம் கொடுங்கள் - ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் பின்னணியில், மருத்துவ, விஞ்ஞான ரீதியான காரணங்கள் புதைந்துள்ளதை படித்துச்சொல்லுங்கள்.
வழிமுறைகள்
முத்தான
மனித
நேயம்
மேம்பட
அலுவலகத்திலும்
சரி,குடும்பத்திலும்
சரி மனித
உறவுகளில்
விரிசல்கள்
ஏற்படாமல்
இருக்கவும்
ஏற்பட்ட
விரிசல்கள்
மேலும்
பெரிதாகாம்ல்
இருக்க,,,
1)
(Ego)
நானே
பெரியவன்.
நானே
சிறந்தவன்
என்ற
அகந்தையை
விடுங்கள்
2)
(Loose Talk) பின்
விளைவு
அறியாமலும்
அர்த்தமில்லாமலும்
பேசிக்கொண்டேயிருப்பதை
விடுங்கள்
3)
(Diplomacy) நாசூக்காக
கையாளுங்கள்
எந்த
பிரச்சனையையும்
விசயத்தையும் (Compromise)
விட்டுக்
கொடுங்கள்
4)
(Tolerance) சங்கடங்களைச்
சில
நேரங்களில்
சில
சகித்துத்தான்
ஆகவேண்டும்
உணருங்கள்
என்றும்
5)
(Adamant Argumeut) என்றும்
வாதாடாதீர்கள்
செய்ததே
சரி
நீங்கள்
சொன்னதே
சரி. (Narrow
Mindedness) விட்டொழியுங்கள்
.குறுகிய
மனப்பான்மையை
6)
(Carring Tales) சொல்வதையும்விடுங்கள்.
இங்கே
கேட்டதை
அங்கே
சொல்வதையும்,
அங்கே
கேட்டதை
உண்மை எது,
பொய் எது
என்று
விசாரிக்காமல்
சொல்வதை
விடுங்கள்.
7)
(Superiority Complex) கர்வப்படாதீர்கள்
மற்றவர்களைவிட
உங்களையே
எப்போதும்
உயர்த்தி
நினைத்து
விடாதீர்.
8)
(Over Expectation) ஆசைப்படாதீர்கள்
அளவுக்கதிகமாய்,
தேவைக்கதிகமாய்.
9)
சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.
எல்லோரிடத்திலும்
எல்லா
விஷயங்களையும்,
அவர்களுக்கு
சம்பந்தம்
உண்டோ,
இல்லையோ.
10)
நம்பிவிடாதீர்கள்.
கேள்விப்படுகிற
எல்லா
விஷயங்கள்.
11)
பெரிதுபடுத்தாதீர்கள்.
அற்ப
விஷயங்களை.
12)
(Flexibility) கொஞ்சம்
தளர்த்திக்
கொள்ளுங்கள்
உங்கள்
கருத்துக்களில்
உடும்புப்பிடியாய்
இல்லாமல்
13)
(Misunder-standing) நடக்கின்ற
நிகழ்ச்சிகளைத்
தவறுதலாக
புரிந்து
கொள்ளாதீர்கள்
மற்றவர்
கருத்துக்களை,செயல்களை.
14)
(Courtesy) இனிய
இதமான
சொற்களைப்
பயன்படுத்தவும்
தவறாதீர்கள்,
மற்றவர்களுக்கு
உரிய
மரியாதை
காட்டவும்,
15)
தேவையில்லாத
மிடுக்கையும்
காட்டுவதைத்
தவிர்த்து,பேச்சிலும்,
நடத்தையிலும்
பண்பில்லாதவார்த்தைகளையும்,அடக்கத்தையும்
பண்பையும்,
காட்டுங்கள்,
16)
பேசுங்கள்
அவ்வப்போது
நேரில்
சந்தித்து
மனம்
திறந்து
17)
பிரச்சனைகள்
ஏற்படும்போது
அடுத்தவர்
முதலில்
இறங்கிவர
வேண்டும்
என்று
காத்திராமல்
நீங்களே
பேச்சைத்
துவக்க
வாருங்கள்
ஏழு உலகத்தின் இரகசியம்
நமது சாஸ்திரம் ஏழுவகைகள் உலகத்தைப் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது
அந்து உலகத்தில் வாழ்பவர்கள் யார் தெரியுமா? 1,பூலோகத்தில் மனிதரும்
வாழ்கின்றன,விலங்குகளும் 2,புவர்லோகத்தில் வாயு தேவர்களும் 3,சுவர்லோகத்தில்,தேவர்களும்,இந்திரனும் 4, மார்க்கண்டேயர் முனிவர்கள்
மகலோகத்தில் 5, சுர்கலோகத்தில் இந்திராதி தேவகள் 6,சனகர் முதலிய மகான்களும் தவலோகத்தில் 7, பிரமதேவர்களும் சத்தியலோகத்தில் பலர் வாழ்கின்றார்கள்
இந்தியா நள்ளிரவில் பெற்றதன் சுதந்திர இரகசியம்
அன்று சுதந்திரம் 15-8-1947 இந்தியாவிற்கு வழங்குவதாய் முன்கூட்டியே ஆங்கில அரசு அறிவித்திருந்தது,எதிர்த்து அஹிம்சை சக்தி வாய்ந்த ஆங்கிலேயரை போராடிச் சுதந்திரம் பெற்றோம் என போராட்டவீரர்களும்
சுதந்திர இந்தியத்தலைவர்களும் மனம் மகிழ்ந்தனர்,ஆனால் அதே சமயம்
௧௫-௮-௧௯௪௭ அன்று வெள்ளிக்கிழமை அஷ்டமியாய் இருப்பதால்,பெற்ற அரும்பாடுபட்டுப் சுதந்தரத்தை நல்ல நாளில்தான் என்னும் நல்ல நோக்கத்தொடு பெறவேண்டும் நம் தலைவர்கள் ஓன்றுகூடிக் கலந்து ஆலோசித்து ஆங்கிலேயரை அணுகினர் ஓன்று,சுதந்திரத்தை 14 ஆம் தேதி
அல்லது கொடுங்கள் 17 ஆம் தேதி நல்ல நாளன்று கொடுங்கள் எனக் கேட்டனர், திட்டவட்டமாய் அதற்குத் ஆங்கிலேயர்கள் மறுத்துவிட்டனர், மாற்ற இயலாது அறிவித்த தேதியை வேண்டுமானால் விடிந்து கொடுக்கிறோம் என்று சொன்னதை மாற்றி எங்கள் கணக்குப்படி இரவு 12
மணிக்குத் தேதிமாறுவதால் கொடுத்துவிடுகிறோம் ௧௨ மணிக்கே என்றனர்,14,ஆம் தேதி ஸப்தமி இரவு விடிந்தால் அஷ்டமிவந்துவிடும் என்னும் முக்கிய தலைவர்கள் அச்சத்தினால் அனைவரும் மீண்டும் ஆலோசித்து கலந்து, இரவு 12, மணிக்குப் பெற்றுக்கொள்கிறோம் எனக் கூறிப்பெற்றனர்,பின் டில்லி செங்கோட்டையில் இரவு 12 மணிக்கு நம் நேரு தேசியக்கொடியை ஏற்றினார்
ஜீவனும்
தீபமும்
இரவில்
தீபமில்லாத
இடத்தில்
இருக்கப்படாது
அப்படியிருந்தால்
வீட்டிலிருந்த
இருளெல்லாம்
அந்தத்
தீபத்திலடங்கிசேரும்.
அதுபோல்
இந்த
ஜீவனாகிய
தீபம்
இருக்கிற
இடத்தில்
விளக்கில்லாவிட்டால்
அந்த
இடத்திலிருக்கிற
இருளெல்லாம்
ஜீவனாகிய
தீபத்தைச்
சேர்ந்து
தேக
நஷ்டத்தை
உண்டு
பண்ணும்.
ஆதலால்.அவசியம்
தீபம்
இருக்க
வேண்டியது.
வீட்டிலிருந்த
இருளெல்லாம்
அந்தத்
தீபத்திலடங்கிசேரும்.
அதுபோல்
இந்த
ஜீவனாகிய
தீபம்
இருக்கிற
இடத்தில்
விளக்கில்லாவிட்டால்
அந்த
இடத்திலிருக்கிற
இருளெல்லாம்
ஜீவனாகிய
தீபத்தைச்
சேர்ந்து
தேக
நஷ்டத்தை
உண்டு
பண்ணும்.
ஆதலால்.அவசியம்
தீபம்
இருக்க
வேண்டியது
{ஆண்டு நிறைவு அப்த பூர்த்தி }
ஆண்டு நிறைவு தினத்தன்று குழந்தையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்
எண்ணை தேய்த்து மங்கள ஸ்நானம் செய்விக்க வேண்டும்.(குழந்தையை ஷவரிலோ. குழாய், ஜலத்திலோ கங்கை ஜலத்தைக் கலந்து எண்ணை தேய்த்து ஸ்நானம் செய்விக்கலாம்) புதிய வஸ்திரம், நகைகள் இவற்றை விதிப்படி மந்திரங்களை ஜபித்து பின்பு அணிவிக்க வேண்டும், இடுப்பைச் சுற்றித் தங்க அரைநாண்,அல்லது பட்டுக் கயிற்றினால் ஆன அரைநாணை அதற்காக ஏற்படுத்தப்பட்ட மந்திரங்களைக் கூறிக் கட்ட வேண்டும் ஆண்டு நிறைவிற்கு முன்தினம் உதக சாந்தி மந்திரங்களை ஜபித்து வைத்து ஜலத்தினால் மறுதினம் ஸ்நானம் செய்வித்து இடுப்பைப்ச் சுற்றிலும் காப்பு கட்ட வேண்டும், இந்தச் சுபச் சடங்கு நவக்ரஹ தேவதைகளையும் அக்னி,போன்ற இதர தேவதைகளைப் பிரார்த்தித்துச் செய்தல் குழந்தைக்கு நன்மை பயக்கும். பிராமணர்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் புது வஸ்திரங்களையும்,சந்தனம், வெற்றிலை பாக்கு தக்ஷிணை இவற்றை அளித்து அவர்களின் ஆசியைப் பெற்றுச் சுபச் சடங்கை ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டும்
இந்தச் சடங்கு தாராள மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், கருமித் தனமான செயல்பாடு தவறுதலாக உச்சரித்துக் கூறும் மந்திரங்கள், சொல்லக் கூடிய முறைகளில் வெளியிடும் அதாவது சப்தத்தில் குறைகள் இவற்றைத் தவிக்க வேண்டும்
இவையாவும் குழந்தையின் முன்னேற்றத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
{உடல் உபாதையின் ஆபத்தான கட்டம்}
உடல் மெலிந்த நிலையில் உடல் உபாதையினால் ஒருவர் பாதிக்கப்பட்டு உடல் நிலையில் இருந்தால்
கீழ்காணும் தினங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
௧) ஜென்ம நக்ஷத்திர ராசியிலிருந்து சந்திரன் (8) வது ராசியில் சஞ்சரிக்கும் போது சந்ராஷ்டமம் உண்டாகும்
௨) தகதயோக தினம் ௩) ஜென்ம நக்ஷத்திர தினம் ௪) ஜென்ம நக்ஷத்திரத்திலிருந்து (22) வது நக்ஷத்திரம்.
சந்திரன் (88)வது பாதத்தில் சஞ்சரிக்கும் ஜென்ம நக்ஷத்திரத்திலிருந்து பொழுது (22) வது நக்ஷத்திரம் ஆகும்,
{ஆவி பிரியும் தினங்கள்}
செவ்வாய்,சனி,ஞாயிற்றுக்கிழமை தியாஜ்ஜியம், பகலும் இரவும் சந்திக்கும் நேரம் அகிய நேரங்களில் நோயாளிகளுக்கு ஆவி பிரிய நேரிடும்
{தினங்களில் சுப காரியம் தவிர்க்கப்பட்ட செய்தலின் அசுப பலன்கள்}
௧) தவிர்க்கப்பட்ட தினங்களில் விவாகத்தைச் செய்தால் அவர்கள் சந்தோஷமாக
இருக்க முடியாது,
௨) பிராணத்தை மேற் கொண்டால் அதுவும் ஆபத்துடன் முடியும்
௩) அது சமயம் குழந்தையின் தலை முடிவெட்டுதலும் அந்தக் குழந்தையின் ஆயுள் பாவத்தைக் குறைத்துவிடும்
௪) தேவதையைப் பிரிதிஷ்டை செய்தாலும் அது திகிலையும், பீதியையும் கொடுக்கும்.
௫) உபநயனத்தைச் செய்தால் அது கண்டிப்பாகவே ஆயுள் பாவத்தைக் குறைக்கும்
௬) யாகத்தைச் செய்தால் யாகம் செய்பவரை அது அழித்து விடும்,
௭) அது சமயம் ஆட்சிப் பீடத்தில் அரசனை அமர்த்தினால் எதிரிகள் அவனை அழித்து விடுவர்
தேவ பூஜைக்குரிய மலர்களின் குண நலன்கள்
{சுர்கலோக குருவருள் பெற்ற பூக்களின் நன்மைகள்} 1-ரோஜா :இதன் இதயத்திற்கு நறுமணம் பலத்தைக் கொடுக்கும், நெஞ்சு சளியை எதிர்க்கும்
2- மல்லிகை :இஅதன் கண்பார்வையைக்கூர்மையாக்கும் நறுமணம்,இதனைப் பயன்படுத்துவதால் நல்ல முறையில் கண்களின் பார்வை செயலபடும்
3- ஜாதிமலர் :இதன் பயன் கண் வியாதியைத் தடுக்கும் சிகப்பு கண்களில் படர்ந்தால் கூட பயன்படுத்திக் ஜாதிமலரைப் குணம் அடையலாம்
4- செவ்வந்தி மலர் : கூந்தலை இம்மலர் வளரச் செய்யும்,குளிர்ச்சியைத் கண்களுக்கு தரும், ஆனால் செவ்வந்திப்பூவை பிய்த்து உபயோகிக்கக் கூடாது 5-மகிழம் பூ :தலைவலி, சிரோவாதம், குணம், இம்மலரின் கண்நோய் போன்றவற்றை அகற்றும், இதயத்தில் நன்மை பயக்கும்,தலையில் நீர் கொண்டிருந்தால் அகற்றும் அதை 6-செம்பங்கிப் பூ:கஷ்டம் சிறிது கிடைப்பது இம்மலர்,நம் உடம்பில் உள்ள தோஷத்தைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு, வாயுவினால் குறைக்கும் ஏற்படும் வலியைக்குறைக்கும் 7-தாழம் பூ:பலம்தரும் இதயத்திற்குப்:வாத நோய் அகலும்.வயிற்று குறைக்கும் வலியையும் 8-அரளிப் பூ: தலையில் உள்ள நீரை அகற்றும் தலை அரிப்பு போன்றவைகளுக்கும் அகலும்
பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை
{தேங்காய் சகுணம்} பொதுவாக சாதாரணமாகவே பூஜைக்கு தேங்காய் உடைக்கும்போது தேங்காய் இருபுறமும் பிசிர்கள் இல்லாமல் சம்மாக உடைந்தால் சுப சகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது எந்த ஒருகாரியம் செய்யத் துவங்குமுன் குளித்து சுத்தமாக தேவதை முன்பாக ஒரு தேங்காயை உடைத்தால் அந்த தேங்காய் சரிசம்மாக பிசிறில்லாமல் உடைந்தால் அந்த காரியம் விக்கினம் இல்லாமல் நடக்கும் அன்ற தேங்காய் உடைக்கும்போது இரண்டுபக்கமும் சரிசமமாக உடைந்தால் காரிய வெற்றியாகும் சுப சகுனமாகும்,கண் உள்ள பக்கம் பெரியதாக உடைந்தால் செல்வமும் மகிழ்ச்சியும் ஏற்படும் கண் உள்ளபகுதி சிறியதாக உடைந்தால் காரியத்தில் விக்கினங்கள் ஏற்படும் நீளவாக்கில் உடைந்தால் ஆகாது துயரம் துன்பம் கெடுதல் ஏற்படும் (3)சில்லாக உடைந்தால் பகையாகும் 4-சில்லாக உடைந்தால் குடும்பத்தலைவர்க்கு ஆகாது 5-சில்லாக உடைந்தால் சண்டை கலகம் வரும் பல சில்லுகளாக உடைந்தால் துன்பங்கள் ஏற்படும் விடைலை தேங்காய் உடைக்கும் போது மட்டும் அதிக சில்லுகளாக உடைவது நல்லது சில்லுகள் தெறிப்பது போல் துனபங்களும் தெறித்து சிதறி நன்மையை ஏற்படுத்தும் எனவே சூரைத் தேங்காய் உடைப்பதும் சாம்பல் பூசனி உடைப்பதும் பல சில்லுகளாவது தான் நல்லது தேங்காய் உடையாமல் ஓடு கழன்று வந்தால் ஆகாது கவலையும் பழியும் வந்து சேரும் மூடிபாகம் இரண்டாக உடைந்தால் சேதம் ஏற்படும் குடும்பம் பிரியும் கையிலிருந்து நழவிச் சென்றால் நோயால் துன்பம் உண்டாகும் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் துன்பமும் அவமானமும் பழியும் பிரிவினையும் ஏற்படும் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவணம் தேவை சகுனம் உள்ளது
வாய்மை
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்".
1.ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார்.
2.அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது.
3.சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான்.
4.ஓடி வந்த மனிதன்,ஐயா,"இந்த வழியே ஒரு பசுமாடு ஓடியதா" என்று கேட்டான்.
5.எப்போதும் உண்மையே பேசும் குரு, மாடு இந்த வழியே சென்றது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
6.மனிதனும் மாடு சென்ற வழியே ஓடினான்.
7.தொலைவில் மறைந்து கொண்டிருந்த மாட்டைக் கண்டதும் அந்த மனிதன் அதை வெட்டிவிட்டான். காரணம் அவன் ஒரு கசாப்புக்கடைக்காரன்.
8.வெட்டுண்டு கீழே விழந்த மாடு இறக்குமுன் கசாப்புக்கடைக்காரன் தப்பிச் சென்ற, தன்னை அவனிடமெ காட்டிக் கொடுத்த சன்யாசியை சபித்தது.
9.பல வருடங்கள் சென்று சன்யாசி மரணமடைந்தான். ஊர் மக்கள் உண்மையே பேசியவர் இவர். இவர் ஆத்மா
சொர்க்கத்தில் வாழும் என்று புகழ்ந்தனர்.
10.ஆனால், சன்யாசியின் ஆன்மாவை எடுத்துச் சென்றவர்கள் யமதூதுவர்கள்,இது சன்யாசிக்குக் கூடமிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
11.யமன் முன் நீதி கோரி நின்ற சன்யாசி நான் என்ன பாபம் செய்தேன்? என்றார்.
12.நீர் ஒரு பொய் சொன்னீர். அதனால் பாபம் செய்து இங்கு வந்துள்ளீர். ஒரு பசுமாட்டைத் தேடி வந்தவனிடம் அது இருக்குமிடத்தை நீர் காட்டினீர் என்றான் எம தர்மன்.
13.நான் பார்த்த உண்மையைத்தானே சொன்னேன். அது எப்படி பொய்யாகும் என்று வாதிட்டார் சன்யாசி.
14.பார்த்ததை எல்லாம் அப்படியே சொல்வது வாய்மை அல்லது உண்மையாகிவிடாது. பிறருக்குத் துன்பம் நேராமல் பேசப்படும் சொற்கள்தான் உண்மை அல்லது சத்யம் எனப்படும் என்றான் யமதர்மன்.
15.நீர் பேசிய வார்த்தையால் உயிருக்குத் தப்பிவந்த வாயில்லாத ஜந்து ஒன்று கொடுரமாக மரணமடைந்தது.
அதன் சாபம் உம்மைப் பீடித்தது.
16.மாடு எங்கே என்று கேட்டவனிடம் நீ யார்? எதற்காக மாட்டை விரட்டுகிறாய் என்று கேட்டிருந்தால் அது விவேகம். அதைத் தெரிந்து கொண்டு மாட்டுக்குத் தீமை வராமல் பதில் கூறியிருந்தால் அதுவே வாய்மை என்றான் யமதர்மன்.
எந்த உணவை உண்ணக்கூடாது?
"கர்ப்பச் சிதைவு செய்யவனால் பார்க்கப்பட்டது, மாதவிலக்கில் இருக்கும் பெண்ணால் தொடப்பட்டது, பறவையால் சாப்பிடப்பட்டது, நாயினால் தொடப்பட்டது - இந்த உணவை, உண்ணக்கூடாது."
தகுதி
தகுதியில்லாதவர்களை எவ்வளவு உயர்த்தினாலும் அவர்கள் உயர்வதில்லை
திதிகொடுத்தல் [அ] தவசம் செய்தல்
இறந்தவர்க்கு மறுவருடம் திதி [அ]அ தவசம் கொடுத்தல் என்ப்து மிக முக்கிய்மான நிகழ்ச்சியாகும். இறந்த ஜீவன் முக்தியடையவோ அல்லது வேறு ஜீவனாக பிறப்பதற்கோ கால அவகாசம் இருக்கும். இந்த காரியத்துக்கு ஜீவனானது பித்ரு லோகத்துக்கு சென்றுவிட வேண்டும். இடையில் நின்று விட்டால் அல்லாடும். எனவே இறந்த ஜீவனுக்கு முறைப்படி தர்ப்பணம் வெய்து வருடம் தோறும் திதி [அ] தவசம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 வருடங்களாவது தொடர்ந்து திதி அ[] தவசம் செய்ய வேண்டியது அவசியம். தர்ப்பணம் செய்வதை நீர்க்கரைகளில் செய்வது
சிறப்பாகும்.
கோயில்
செங்கதிரோன் சூரியனார் கோயில் குடி கொண்டார் ஸ்ரீனிவாசன் திருப்பதியில் திங்களென நின்றார் அங்காரகன் பழனி முருகனாய் ஆனார். அரியபுதன் சொக்கராய் மதுரையில் அமர்ந்தார் தங்கு குரு திருச்செந்தூர் சுப்ரமண்யரானார் தனியரங்கில் சுக்கிரனாய் திருசரங்கம்சயனம்பொங்குசனி நள்ளாற்றில் திருக்கோயில் கண்டார் புனிதகான ஹஸ்தி ஈசன் ராகு கேது ஆனார்.
திருநீறு பூசுவது ஏன்?
சைவர்கள் திருநீற்றினை இட்டுக்கொள்கிறார்கள் திருநீறு என்பது சாம்பல்தான். காணும் இந்த உலகமும், எல்லாப் பொருள்களும், நாமும் கடைசியில் அழிந்துசாம்பல் ஆபோம் என்பதைக் குறிப்பதே திருநீற்றின் கருத்தாகும் இந்ய நிலையாமை உண்மையை உணர்த்தவே சைவர்கள் திருநீறு அணிந்துகொள்கிறார்கள். நாம் அழிந்து ஒருநாள் சாம்பலாவோம் என்னும் நிலையாமை உண்மையை நாம் உணர்ந்தால் தான் "நான்""எனது" என்னும் ஆணவத்தால் வரும் சண்டைச் சச்சரவுகள் அகலும் இல்லாமற் போய்விடும். எனவே, தீவினைகளைச் செய்ய அஞ்சி நல்வினைகளை செய்ய முற்படுவோம்!
பகீரதப்பிரயத்தனம்
சாதிக்கமுடியாத ஒன்றைச் சாதிக்கும்போது அதை "பெரிய பகீரதப் பிரயத்தனம்" என்று சுட்டுகிறோம். இதன் பின்னணியாவது: பகூரதன் அயோத்தி அதிபதி (மன்னன்) தம் முன்னோர்களான சகரபுத்திரர்களை உய்தி பெற்ச்செய்யாஅகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார் கங்கையை பூமிக்குக் கொண்டு வர, இவருக்கு முன்பு, அம்சுமான், திலீபன் என்ற அயோத்தி மன்னர்களும், முயற்சி செய்து தோற்றனர். பகீரதன் மிகக்கடுமையாக முயற்சித்து, பிரம் மனைத் துதித்து பதினாயிரம் ஆண்டுகளும், சிவபெருமானைத் துதித்து ஜயாயிரம் ஆண்டுகளும், மீண்டூம் சிவனைத் துதித்து இரண்டரை ஆயிரம் ஆண்டுகளும், கங்கையைத் துதித்து இரண்டரை ஆயிரம் வருடங்களும் ஆக முப்பதாயிரம் வருடங்கள் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரச்செய்தார். இதனால் மிக்கமுயற்சியுடன் ஒரு காரியத்தை ந்றைவேற்றினால். அதை"பகீரதப் பிரயத்தனம்" என்று குறிப்பிடும் வழக்குத் தோன்றியது.
கலங்கிவிடும்
ஆழமில்லாத குளத்தில் நீர் குடிக்கவேண்டுமானால் அதைக் கலக்காமல் மெதுவாகக் குடிக்க வேண்டும். கலக்கினால் அடியில் உள்ள சேறு மேலே கிளம்பிவிடும். அதுபோல, சாஸ்திர்த்தைப்பற்றி வீண் வாதத்தில் இறங்கினால் உன் மூளை?
பாபம் ஏற்படாதா
பாபச் செயலைச் செய்வதால் பாபம் ஏற்படத்தான் செய்யும். அதனுடைய பலனை அனுபவிக்கவும் வேண்டும். பலி கொடுக்கப்படும் பிராணியின் பின்னங்கால்களை எந்த மரத்தில் கட்டி வைக்கிறார்களோ, அந்த மரம்கூட, பாப்த்தின் காரண்மாகக் காய்ந்து போவதை நாம் பார்த்திருக்கிறோம். பணம் வங்கிக் கொண்து பிராணிகளை வெட்டும் கசாப்புக்காரனின் கைகள் பின்னாட்களில் செயலற்றுப் போகின்றன என்பதால், அவர்கள் கையில் கத்தியை கட்டிக் கொண்து பிராணியை வெட்டும் கார்யத்தைச் செய்கிறார்கள். ஒநாய்க்கு ஏழெட்டுக் குட்டிகள் மட்டுமே. அப்படியிருந்தும் கூட்டம் என்றால் மானிக்குத்தானே தவிர, ஒநாய்க்கு அல்ல. ஹிம்லை முதலிய பாபங்களைச் செய்கிறவர்களின் பரம்பரை நீண்டநாள் நீடித்திருப்பதில்லை என்பது இதன் கருத்து.
புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை
உணர்ந்தவனே ஞானி.
துன்பங்களை பொறுப்பவனே தவசி.
விருந்தினருக்கென்று வாழ்பவனே
இல்லறத்தான்.
அறஞ்செய்யவாய்ப்பு இல்லாதபோது
(கொடுக்கமுடியாதபோது)
இறந்தவனே இருந்தவன்.
கொடுக்காமல் பொருளைத் திரட்டி
வாழ்பவனே இறந்தவன்.
அமைதி பெருவது எப்படி
1.மூட்டைப் பூட்சியைப்போல் பிறரை இ ம்சித்து வாழாதே.
2.எலியைப்போல் திருடி வயிற்றை வளர்க்காதே.
3.செல்லைப்போல் பிறர் பொருளைக் கெடுத்து மகிழாதே.
4.தேனீயைப் போலவும், எறும்பைப்போலவும் உழைத்து உண். அது உணக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி லற்கப் பையன்களை அனுப்பலாமா? கூடாதா?
கிறிஸ்தவப் பள்ளில்லூடங்களுக்குப் பையன்களை அனுப்பினால், அவர்கள் நம் வீட்டுக்குள்ளேயே கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். அதாவது உங்கள் குழ்ந்தைகள் செளித்தோற்றத்தில் ஹிந்துவாகவும், உள்மனத்தில் கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிடுவார்கள். ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பாலிருந்து இங்கே வந்து, உங்கள் குழந்தைகளைக் கிறிஸ்தவர் களாக ஆக்கிவிடுகிறார்கள். நீங்கள், உங்கள் வீட்டுப்பிள்ளைகளைக்கூட ஹிந்துவாக வைத்திருக்க முடிபவில்லை. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா? குழ்ந்தைகள் நமது நாட்டின் அரிய செல்வம். அதனைக் காப்பாற்ற வேண்டும். ப்ள்ளிக்கூடம், கல்லூரிகளில் நம்முடைய தர்மத்தைப் பற்றியும், கீதை, ராமாயணம் முதலிய் நூல்களைப் பற்றியும் குழந்தைகளுக்குப் போதனை அளிக்கவேண்டும். சமய போதனைக்கு என ஒரு மணி நஎரம் கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.நீங்கள் எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு எளிமையைப் புகட்டுங்கள். நீங்கள், பல்சுவை, நவீன வஸ்துக்கள், சொகுசு ஆகியவற்றைத் துறந்து, ஒயர்பணிகளில் ஈடுபட்டால், அதன் விளைவு குழந்தைகளிடம் காணப்படும். வீட்டில் பகவான் வழிபாட்டு அறை அமைத்து பகவானுக்குப் பீஜை நடத்த வேண்டும். பகவானின் சரணாமுதத்தை சிறியவர் - பெரியவர் எல்லோரும்பருகவேண்டும். இல்லத்தில் கடவுள் ஸம்பந்தமான பேச்சுக்கள், பகவன் நாமகீர்த்தனம், நல்ல இஅசைப்பாடல் நிகழ்த்த வேண்டும். நீங்கள் எவ்வளவு மேண்மைப் படுகிறீர்களோ, அவ்வளவுக்கே குழந்தைகளும் உயர்வடைவார்கள். சொற்களைவிட நடத்தையின் பாதிப்பு ஆழமாகப் ப்தியும்.
பசுவைப் போன்றவனிடம் பழகு.
பாம்பைப் போன்றவனிடம் பழகாதே.
ஒரு விநாடி சினம், ம்றுவிநாடி மகிழ்ச்சி, இப்படி விநாடிக்கு விநாடி மாறுபடுகின்றவனுடைய நட்புக் கூடாது. உறுதுயான உள்ளம் இல்லாதவனுடையநட்பும். அவனால் கிடைக்கும் நன்மையு பயங்கரமானது.
பயன் கருதிப் பழகுகின்றவனுடைய நட்பும் கூடாது.
சிலர் உன்பால் வருகின்ற போதெல்லாம் உன்னிடம் என்ன இருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்ப்பார்கள் நன்றி பெற்றவன் கையீரம் உலர்வதற்குமுன் செய்த நன்றியை மறந்து விடுவான்.
உதவாத தவிடு, வைக்கோல், போட்டு, இவைகளை உன்பால் பெற்ற பசு அமுதமான பாலைத் தருகின்றது. பாலையே உன்பால் பெற்ற பாம்பு நஞ்சைத் தருகின்றது.
குடும்பத்தில் எப்படி இருக்கவேண்டும்?
குடும்பியின் கடமை
ஒரு மைந்தனும் இல்லவிட்டால், முதுமைக் காலத்தில் நமக்கு யார் தான் தொண்டு செய்வார்கள்?
யாருக்கு மைந்தர்கள் இருக்கிறார்களோ, அந்தப் பையன்கள் எல்லாம் தத்தம் அப்பா-அம்மாவுக்குப் பணிவிடை செய்கிறார்களா, என்ன? இந்நாளைய மைந்தர்கள் அப்பா-அம்மாவின் சொத்து, ஸீகங்களைத் தம் பெயரில் மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்; சிராத்தம்-தர்ப்பணம் பயனற்றவை என்று எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட பையன்கள் எங்கே தொண்டு செய்யப் போகிறார்கள்? துன்பங்களைக் கொடுப்பவர்களாக மட்டுமே அவர்களால் இருக்க முடியிம். இண்மையில், நமது ப்ராரப்த வினையின்படி, எப்படிப்பட்ட தொண்டு கிடைக்க வேண்டுமோ, எவ்வளவு ஸீக-செளக்யங்கள் கிடைக்க வேண்டும், அவ்வளவும் கிடைக்கும், இல்லாவிட்டாலும் முற்றும் துறந்ததுறவிகளுக்குச் செய்யப்படும் அளவு தொண்டு, குடும்பஸ்தர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோமே? அதாவது, பிள்ளை இருந்தால் பணிவிடை செய்வான் என்று எண்ணக் கூடாது.
ஆற்றல் பெறவேண்டி
அம்பிகையை வணங்கு.
1.இனிமையாகப் பேசு கிளிபோல்.
2.ஒருமையுடன் இறைவனை நினை கொக்குபொல்.
3.நன்கு மென்று உண் ஆடுபோல்.
4.குளிப்பாயாக யானைபோல்.
5.நன்றியறிந்துகொள் நாயைப்போல்.
6.குறிப்பறிந்துகொள் காக்கைபோல்.
7.உழை தேனீயைப்போல்.
8.ஆதித்தனைவணங்கு ஆரோக்கியம்பெறவேண்டி.
9.அக்கினியை வணங்கு செல்வம் பெறவேண்டி.
10.முருகனை வணங்கு ஞானம் பெறவேண்டி.
11.திருமாலை வணங்கு சுகம் பெறவேண்டி
பகவானைப் பற்றி
பகவானைக் கண்களால் பார்க்கவிடாமல் கணவன்மார்கள் தடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனாலேயே, கோபியர்கள் கணவன்மார்களைத் துறந்தார்கள். அவர்கள் கணவன்மார்களின் சொற்படி நடந்திருந்தால், கணவன்மார்கள் பாபத்தின் பங்காளி களாகியிருப்பார்கள். ஆகவே கணவர்களின் சொல்லை மதிக்காததால், அவர்கள் கணவன் மார்களைப் பாபத்திலிருந்தே காப்பாற்றினார்கள்.
வெட்டுக்கிளிகள் பற்றி.
எந்த ஆண்டில் வெட்டுக்கிளிகள் அதிகமாக வந்தனவோ, அந்த வருஷம் விவசாயம் நன்றாக நடந்தது; பஞ்சம் ஏற்பட்டதில்லை
கெட்டநாளில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ௯மறுமலர்ச்சித் திருமணம்0 மறுமலர்ச்சித் திருமணம் எனும் மறுமாங்கல்ய பூஜை
தவறான நாட்களில் திருமணம் செய்து கொண்டு வாழ்வில் போராடிக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இருப்பது மறுமாங்கல்ய பூஜையாகும்.
இந்த மறுமலர்ச்சித் திருமணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி விடும். மறுவாழ்வு பெறலாம். இம்முறையைக் கையாண்ட அனைத்துத் தம்பதிகளும் இன்று வளமுடன் வாழ்கிறார்கள். போராட்ட வாழ்விலிருந்து விடுதலை பெற்று புது வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எமது ஆலோசனையை நமது பாரத நாட்டில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, ம்லேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற உலக நாடுகளிலுள்ள பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்கு மறுமலர்ச்சித் திருமணத்திற்கு அதிர்ஷ்ட நாளைக் குறித்துக்கொடுத்துள்ளேன்.
பல்வேறு வகையான சிக்கலில் சிக்கித் தவித்துப் போராடிக் கொண்டிருந்த மேல்நாட்டு அன்பர்கள் அதிர்ஷ்ட நாளில் மறுமலர்ச்சித் திருமணம் செய்து கொண்டதால் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இம்முறை எல்லா மண்ணில் வாமும் மக்களுக்கும் பொருந்தும். இந்த (மறுமாங்கல்யம்) மறுமலர்ச்சித் திருமணத்திற்கு அதிர்ஷ்ட நாளைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கணவன், மனைவி இருவரின் பெயரையும் அதிர்ஷ்டமாக்கிக்கொள்ள வேண்டும்.
சிக்கலில் மாட்டித் தவிக்கும் தம்பதிகள் இனிய வாழ்வைப் பெற்று இன்புற்று வாழ மறுமலர்ச்சி திருமணத்தைக் கையாண்டு எல்லா அதிர்ஷ்டங்களையும் பெற்று வாழங்கள்.
நல்ல ஆடைகளை அணிந்தவன் சபையை வென்று விடுவான். பசுக்களை உடையவன் சிறந்த உணவு உண்ணவேண்டுமென்ற ஆசையை வென்றுவிடுவான். வாகனம் உள்ளவன் வழியை வென்றுவிடுவான். ஒழக்கம் உள்ளவன் எல்லாவற்றையும் வென்று விடுஆன். இதனால்தானே என்னவோ, ஆங்கிலத்தில்" If character is lost, everything is lost" என்பர்.
ஒருத்தியினுடைய கரு, தானாகவே வளர
இது ஒரு நோய், இதற்கான சிகிச்சை பெறவேண்டும். அவள் கருப்பையில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் கரு வெந்துபோய் விழந்துவிடுகிறது. பசும் பால் கறப்பவன் ஒரு பாத்திரத்தைத் துணியால் மூடவேண்டும்;துணியின் மேல் கற்கண்டை குழைவாகப்பொடிசெய்துவைக்க வேண்டும். அதன் மேல் பசும் பாலைக் கறக்கவேண்டும். அதாவது, கற்கண்டுப் பொடி, பாலுடன் கலந்து, பாத்திரத்தை அடையவேண்டும். பசு எதிரிலேயே அமர்ந்து கறப்புச்சூட்டுடன்கூடிய் பாலை அப்போதே, அந்தப் பெண் நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாத காலம் அருந்த வேண்டும்.
நம் நாடில் செய்ய வென்டிய மாற்றம்.
நம்நாட்டில் 1925 ஆண்டில் படித்து பட்டம் பெற்றவர்கள், இன்றும் அந்த பட்டத்தை பயன்படுத்தி ஒரு கல்லூரி பேராசிரியராக இருக்கலாம். அமெரிக்காவில் இந்த பாச்சா பலிக்காது. 3 ஆண்டுகளுக்கொருமுறை தொடர்ந்து பட்டத்தை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் தான் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் பேராசிரியராய் ஏற்றுக் கொள்ளும்.
பதினாறு வகைப் பேறுகள்
1.புகழ் 9.நுகர்ச்சி
2.கல்வி 10.அறிவு
3.வலிமை 11.அழகு
4.வெற்றி 12.நோயின்மை
5.நன்மக்கள் 13.வாழ்நாள்
6.பொன் 14.பெருமை
7.நெல் 15.இளமை
8.நல்லூழ் 16.துணிவு
சைத்தன்யர் பொன்மொழிகள்
விஷ்ணுவின் திவ்ய தரிசனத்தைக் கற்பனைக் கண்களால் கண்டறியாதவர்களின் கண்கள் மயிலின் தோகையிலுள்ள சலனமற்ற
கண்களை போன்றவை.
* * *
விஷ்ணு ஸ்தலங்களைத் தரிசிக்கநடந்து செல்லாத கால்கள் பூமியில் ஆழப்பதிந்த் மரத்தின் வேர்களுக்கு ஒப்பானவை.
கிருஷ்ண நாமத்தைக் கேட்டு உருகாத மனம் கல்லிலும் கடினமானது.
உணரமாட்டார்கள்
கள் குடித்தவன் கவனம் இல்லாதவன் பைத்திய்ம் பிடித்தவ்ன், களைப்புற்றவன், கோபக்காரன், பசி எடுத்தவன், அவசரப்படிகிறவன் உலோபி. பயங் கொண்டவன், காமவெறியன்-இவர்கள் அனைவரும் தர்மத்தின் தத்துவத்தை?
குடும்பம் பற்றி
குடும்பத்தில் சச்சரவு ஏற்படக்கூடாது. இதற்காக, ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுத்து, மற்றவர்களுடய அதிகாரத்தை நிலை நாட்ட வேண்டும். ஒவ்வொருவ்ரும் தமது மரியாதையையும், பெருமையையுமே விரும்புகிறார்கள். அதனால் நாம் மற்றவர்களுக்கும் மரியாதையும், பெருமையும் அளிக்கவேண்டும்.
|| Saanthi, Saanthi, Saanthi: ||
|